அத்தியாவசியப் பணியில் பத்திரிகையாளர்கள் இடம் பெற வேண்டும்.! மாநில அரசை அலற விடும் மத்திய அமைச்சர் ஜவடேகர்!

By Thiraviaraj RMFirst Published Apr 13, 2020, 9:40 PM IST
Highlights

ஊடக துறையை சார்ந்தவர்களும் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார், துப்புரவுத் தொழிலாளர்கள் போன்ற முன்னணி ஊழியர்களாகவே உள்ளனர். கொரோனா நெருக்கடிக்கு மத்திய அரசு எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனித்துப் பின்பற்றுமாறு அட்வைஸ் கொடுத்திருக்கிறார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர்.

T.Balamurukan

"ஊடக துறையை சார்ந்தவர்களும் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார், துப்புரவுத் தொழிலாளர்கள் போன்ற முன்னணி ஊழியர்களாகவே உள்ளனர். கொரோனா நெருக்கடிக்கு மத்திய அரசு எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனித்துப் பின்பற்றுமாறு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்". மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர்.

கொரோனா வைரஸ் இந்தியாவை மட்டுமல்ல உலக நாடுகளையை புரட்டி போட்டு சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கிறது.கொரோனா மருத்துவ பணியில் டாக்டர்கள்,துப்புரவு பணியாளர்கள்,போலீஸார்,பத்திரிகையாளர்கள் பங்கு எண்ணற்றது. இந்த நான்கு தூண்களும் கொரோனா வைரஸ் ஒழிப்பு, விழிப்புணர்வு போன்ற பணியில் இமை தூங்காமல் வேலை செய்து வருகிறார்கள்.தங்களுடைய உயிரையும்,பணையம் வைத்து இவர்கள் எல்லாம் பணியாற்றி வருகிறார்கள்.
மருத்துவர்கள்,காவல்துறை,துப்புரவு பணியாளர்கள் எல்லாம் அரசு துறை என்பதால் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், அரசாங்கமும் அவர்களுக்கு சலுகை காட்டி வருகிறது. நாட்டு மக்களுக்கு செய்திகளை கொண்டு போய் சேர்க்கும் செய்திதுறையை எந்த அரசியல் கட்சியாவது    தலைவர்களாவது பாராட்டுவதுண்டா.? மருத்துவர்களுக்கு,துப்புரவு பணியாளர்களுக்கு சம்மாக சம்பளம் இரட்டிப்பாக வழங்குகிறது. இதற்கு எல்லாம் நிதி அரசிடம் இருக்கிறது. பத்திரிகையாளர்களுக்கு அந்த அளவிற்கு அரசாங்கம் வாரி வழங்க வேண்டாம். கொரோனா ஒழிப்பு முடியும்  வரையில் மாதம் தோறும் குறைந்தது 20 ஆயிரம் வழங்க வேண்டும்.இதனால் அரசு கஜானா காலியாகிவிடாது. அரசின் வருவாய் என்ன என்பது பத்திரிகையாளர்களுக்கும் தெரியும்.இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்வார் என்று பத்திரிகையாளர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

 

பல்வேறு வதந்திகளுக்கும்,அரசு அறிவிக்கும் செய்திகள்,திட்டங்கள்,அறிவிப்புகளை மக்களிடம் கொண்டு செல்வதால் மக்கள் நம்பிக்கையுடன் அச்சம் இல்லாமல் இருக்கிறார்கள்.இல்லையென்றால் சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளில் மக்கள் பொங்கி எழுந்திருப்பார்கள் என்பது அரசிற்கு நன்றாகவே தெரியும்.

இருப்பினும், கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தினால்,தமிழகத்தில் ஏப்ரல்30ம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைக்காக மட்டும் சில அரசுத் துறைகள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், அதில் காவல் துறையினர், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களின் பணிகள் மட்டும் தொடர்ச்சியாக அயராது உழைத்து வருகின்றனர். 

தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து சேவை செய்து வரும் டாக்டர்கள், நர்ஸ்கள்.துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோரை பலரும் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களை சந்தித்தார். " ஊடக துறையை சார்ந்தவர்களும் மருத்துவர்கள், செவிலியர்கள், போலீசார், துப்புரவுத் தொழிலாளர்கள் போன்ற முன்னணி ஊழியர்களாகவே உள்ளனர். மேலும் கொரோனா நெருக்கடிக்கு மத்திய அரசு எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனித்துப் பின்பற்றுமாறு அவர் கூறியுள்ளார். 

மாநில அரசியல் கட்சிதலைவர்கள் எல்லாம் வாயில் வடை சுடும் நேரத்தில்,அரசாங்கம் எல்லாம் பத்திரிகையாளர்கள் பணியைகளை பாராட்டமனம் இல்லாத நேரத்தில், மத்திய அமைச்சர் அத்தியாவசிய பணியாளர்கள் பட்டியலில் பத்திரிகையாளர்களையும் சேர்க்க வேண்டும் அர்சாங்கம் அதை கவனிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பது பத்திரிகையாளர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

click me!