பாஜகவில் சேர்ந்த ஜோதிராதித்யாவுக்கு முதல் நாளே பரிசு... ராஜ்ய சபா தேர்தலில் வேட்பாளராக பாஜக அறிவிப்பு!

By Asianet TamilFirst Published Mar 11, 2020, 10:02 PM IST
Highlights

இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முறைப்படி பாஜகவில் ஜோதிராதித்ய சிந்தியா இணைந்தார். பாஜக தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் சிந்தியா பாஜகவில் இணைந்தார். இந்த நிகழ்வு நடந்த சில மணி நேரங்களில் மத்திய பிரதேசத்துக்கான மாநிலங்களை எம்.பி. தேர்தலில் வேட்பாளராக ஜோதிராதித்யா சிந்தியாவை பாஜக தலைமை அறிவித்தது.
 

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவை மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு வேட்பாளராக பாஜக தலைமை அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. முதல்வராக கமல்நாத் இருந்துவருகிறார். மத்திய பிரதேசத்தில் மூத்த காங்கிரஸ் தலைவராக இருந்துவரும் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் கமல்நாத்துக்கும் பனிப்போர் நிலவி வந்தது. இதனால், காங்கிரஸ் கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்த சிந்தியா, திடீரென பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரைச் சந்தித்து பேசினார். இதனையடுத்து பாஜகவில் இணையப்போவதாகவும் சிந்தியா தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலிருந்து 22 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதனால், மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி முறைப்படி பாஜகவில் ஜோதிராதித்ய சிந்தியா இணைந்தார். பாஜக தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் சிந்தியா பாஜகவில் இணைந்தார். இந்த நிகழ்வு நடந்த சில மணி நேரங்களில் மத்திய பிரதேசத்துக்கான மாநிலங்களை எம்.பி. தேர்தலில் வேட்பாளராக ஜோதிராதித்யா சிந்தியாவை பாஜக தலைமை அறிவித்தது.


மத்திய பிரதேசத்தில் 3 மாநிலங்களவை எம்.பி.க்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் 26 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் சிந்தியாவை வெற்றி பெற வைத்து மத்திய அமைச்சராக்க மோடி விரும்புவதாக  தகவல் வெளியாகியுள்ளது.

click me!