
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோரை எல்ல்லாம் அழைத்து வந்து, பிரமாண்டமான கிறிஸ்துமஸ் விழாக்களை நடத்தி, பிரபல நபராக மாறியவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அருமனை ஸ்டீபன். விசிக கட்சி நிர்வாகியாக இருந்தவர். தற்போது அருமனையில் தவெக சார்பில் கிறிஸ்தவ விழாவை ஏற்பாடு செய்து நடத்தினார். இந்த விழாவில் திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் தவெகவை சார்ந்த ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அருமனை ஸ்டீபன், ‘‘
‘‘திமுக கலந்து கொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஆனால், காலம் தாழ்த்தினார்கள். ஆகையால் தவெக நிர்வாகிகளை வைத்து விழா நடத்த ஏற்பாடு செய்தோம். அங்கே முதல் கட்ட தலைவர்கள் இல்லை என்றாலும் பரவாயில்லை. இரண்டாம் கட்ட தலைவர்களையாவது நீங்கள் கூட்டி வாருங்கள். எப்படியாவது ஆதவ் அர்ஜூனாவை கூட்டிட்டு வாருங்கள் என்று சொன்னேன். சரி, முயற்சி பண்ணுவோம் என்றார்கள். இப்போதைக்கு மாநாடு இருக்கிறது. விரைவில் நடட்தலாம் என்றார்கள்.
அதற்குள் எப்படி திமுகவினர் கண்டுபிடித்து விட்டனர். எப்படி உளவுத்துறை கண்டுபிடித்தார்கள் என தெரியவில்லை. நான் 28ஆம் தேதி சென்னை சென்று கொண்டு இருந்தேன். அப்போது துணை முதல்வர் பிஏ, இரவு 11:30 மணிக்கு எனக்கு போன் செய்தார், இந்த ப்ரோக்ராம் எப்போ தொடங்கும்? எப்ப முடியும்? ப்ரோக்ராமுக்கு உதயநிதி வரலாம் என சொல்லிவிட்டார். நீங்கள் எல்லாம் ஏற்பாடு செய்யுங்கள் எனச் சொன்னார். சரி ஓகே, என்று சொன்னேன். ஓரிரு நாட்கள் கழித்து உதயநிதி பிஏ செந்திலை நான் உடனே தொடர்பு கொண்டேன். ப்ரோக்ராம்க்கு உதயநிதி வாராரு. கடைசியா நாள் நெருங்குது. இனி வந்து தவெகவை கூப்பிட முடியாது என நினைத்துக் கொண்டு இருக்கும்போது புரோகிராம் கேன்சல் எனச் சொல்லி விட்டார்கள்.
இன்டலிஜென்ஸ் ரிப்போர்ட் வித்தியாசமா இருக்குது. நான் கேட்கிறேன் ஒரு அறுமனை ஸ்டீபனை பற்றி ஒரு ரிப்போர்ட் கேக்குறதுக்கு உங்களுக்கு 30 நாள் ஆச்சுன்னா, உண்மையிலேயே நீங்க பதவியை ராஜினாமா பண்ண வேண்டும். நான் உங்களை பார்த்து சொல்லுகிறேன், நீங்கள் இப்போது முதலமைச்சராக வராவிட்டாலும் உங்களை நான் பெரிதும் நேசிக்கிறேன். நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராகவாவது ஆவீர்கள். உங்களை இந்த மேடைக்கு நான் அழைத்து வருவேன். அதுதான் கிறிஸ்தவ இயக்கம். நீங்கள் முதலமைச்சராக வருவதற்கு கஷ்டம். ஏனென்றால் இந்த மேடையில் வந்தவர்கள் அருமனைக்கு வருகிறவர்கள் வெறுமனே போவதில்லை. ஏனென்றால் நாங்கள் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் அல்ல.
பெரிய பெரிய அங்கிகளை போட்டு பாஸ்டர், பேராயர்களை எல்லாம் அழைத்து முதலமைச்சராக்கி இருக்கும்போது நீங்கள் முதலமைச்சராக இருந்தால் உடனடியாக உங்களைத் தேடி வந்து, உங்களை வாழ்த்தி, உங்களை போற்றுவார்கள் வருவார்கள். ஆனால், உங்கள் மத்தியில் ஒருவர் இருக்கிறார். எங்களுடைய புஜிதகுரு ஐயா. எல்லோருக்கும் நடுநிலை ஆனவர் என்பதை இந்த மேடையில் இருந்து காண்பித்து நிரூபித்து காட்டினார். அவர்தான் சமூக நல்லிணக்கத்து நாயகன். நிறைய பேர் ஆயர்கள், நிறைய பாஸ்டர்கள் நீங்கள் ஆட்சியில் இருக்கும்போது மட்டும் தான் உங்களிடம் வருவார்கள். நாங்கள் இதோ இந்த தளபதி 2026 ஆட்சிக்கு வந்தாலும் உங்களை அழைப்போம். அதுதான் கிறிஸ்தவ இயக்கம் என்பதை தெளிவுபடுத்துகிறேன். எத்தனை வழக்கு போடுவீர்கள் சொல்லுங்கள்? 28 நாள் ஜெயிலில் போட்டீர்கள். எங்கள் வாழ்வாதாரத்தை அழித்தீர்கள். எந்த வழியில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரசன் என்று உங்களைச் சொல்வது? நான் கேட்கிறேன் நீங்க எந்த விதத்தில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பு அரசு என்கிறீர்கள்?
பேராயர்களே, என்னுடைய கிறிஸ்தவத்தின் தலைவர்களே, ஊழியக்காரர்களே... உங்களை பார்த்து நான் கேட்கிறேன். உங்களுக்கு நாலாண்டுகளாக கோரிக்கை வைக்க தெரியவில்லை. இறுதியில் அவர்கள் விடைபெற போகும்போது நீங்கள் அவர்களிடம் சென்று கோரிக்கை வைக்கிறீர்கள்.உங்களிடம் அந்த கோரிக்கை, இந்த கோரிக்கை நிறைவேற்றினேன் என்று சொல்லுகிறீர்களே. ஒன்றும் தெரியாத அருமை ஸ்டீபன் ஆகிய நான் கேட்கிறேன். எந்த கோரிக்கையை சிறுபான்மை மக்களுக்காக இவர்கள் நிறைவேற்றினார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா? சகோதரர் எடப்பாடியாவடு பத்தாயிரம் ரூபாய் செருசலம் செல்வதற்கு கூட்டிக் கொடுத்தார். இவர்கள் எந்த கோரிக்கையை நிறைவேற்றீனார்கள்? கலைஞர் இருந்தார் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்தார். அடில் மாற்றுக் கருத்து இல்லை. நீங்கள் எத்தனை தடவை மன்னிப்பு கேட்டாலும் சிறுபான்மை மக்கள் நாங்கள் அல்ல, யாரும் மன்னிக்க மாட்டார்கள்.
நீங்கள் எத்தனை சொன்னாலும் இந்த தடவை ஜோசப் விஜய் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவார். ஜோசப் விஜய் கர்த்தரால் உயர்த்தப்படுவார். இந்த தடவை ஜோசப் விஜய் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்படுவார்’’ எனப்பேசினார்.