ஜான்பாண்டியன் - கிருஷ்ணசாமியை டரியலாக்கிய எடப்பாடி... பாமக- தேமுதிக.,வுக்கு குஷி..!

By Thiraviaraj RMFirst Published Oct 24, 2019, 5:19 PM IST
Highlights

இந்தக் கூட்டணியே உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்பதால் ஜான்பாண்டியன் -கிருஷ்ணசாமியின் நிலை ஊசலாட்டத்தில் உள்ளது. அவர்கள் திமுக கூட்டணிக்கு சென்றால் ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா என்பது கேள்விக்குறியாக்கி இருக்கிறது.

இடைத்தேர்தலில் இரு தொகுதிகளிலும் அதிமுக அசாத்திய வெற்றி பெற்றுள்ளது. இதற்கு காரணம் கூட்டணி கட்சிகளி உழைப்பும் உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார்.

 

பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, தமாக, பாஜக, புதியநீதி கட்சி, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை, கொங்குநாடு முன்னேற்றக் கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், புரட்சி பாரதம், சமத்துவ மக்கள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகம், தமிழ் மாநில முஸ்லீம் லீக், இன்னும் எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார் எடப்பாடி பழனிசாமி. 

ஆனால் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த ஜான்பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமியின் புதியதமிழகம் கட்சிகளுக்கு அவர் நன்றி தெரிவிக்கவில்லை. காரணம், ஆதரவு கேட்டு ஜான்பாண்டியனையும், டாக்டர் கிருஷ்ணசாமியும் நாடிச் சென்ற அமைச்சர்களை இருவரும் அவமானப்படுத்தி அனுப்பினர். ஜான்பாண்டியனை சந்தித்த அமைச்சர்களிடம் அவர், அமைச்சர்கள் என்றும் பாராமல் நடந்து கொண்ட விதம் அதிமுக நிர்வாகிகள் மத்தியில் ஆறாத வடுவாக மாறி விட்டது. 

டாக்டர் கிருஷ்ணசாமியை சந்தித்தபோது, தங்கள் கட்சி வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றாத அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என வழியச் சென்றவர்களை வேதனையூட்டினார் டாக்டர் கிருஷ்ணசாமி. ஆனால், அவர்களது ஆதரவு இல்லாமலேயே இரு தொகுதிகளிலும் குறிப்பாக நாங்குநேரியில் பெற்ற வெற்றி அதிமுகவினர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியனிடம் அடைந்த வேதனைக்கு மருந்தாகி விட்டது. இந்த வெற்றியை ஜான் பாண்டியன் - கிருஷ்ணசாமி இருவருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அதிமுகவின் இந்த அசாதாரண வெற்றியை பெற்றுக் கொடுத்து எடப்பாடி பழனிசாமி ஜான் பாண்டியனையும், டாக்டர் கிருஷ்ணசாமியையும் டரியலாக்கி உள்ளார்.  

இந்தக் கூட்டணியே உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும் என்பதால் ஜான்பாண்டியன் -கிருஷ்ணசாமியின் நிலை ஊசலாட்டத்தில் உள்ளது. அவர்கள் திமுக கூட்டணிக்கு சென்றால் ஸ்டாலின் ஏற்றுக்கொள்வாரா என்பது கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இதுவும், கிருஷ்ணசாமி - ஜான்பாண்டியனை டரியலாக்கி இருக்கிறது. 

click me!