வேலையோ மிகுதி ! ஆட்களோ இல்லை !! மத்திய அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு !!

By Selvanayagam PFirst Published Sep 16, 2019, 11:11 AM IST
Highlights

இந்தியாவில் வேலை வாய்ப்புகளுக்கு பஞ்சம் இல்லை என்றும் ஆனால் திறமையான வேலையாட்களுக்குத்தான் பஞ்சம் எனவும் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்

பாஜக கடந்த முறை ஆட்சிக்கு வந்தபோது ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என பிரதமர் மோடி உறுதி அளித்திருந்தார். அண்மையில்  நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.

தற்போது பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த இந்த 100 நாட்களில் ஜிடிபி 5 சதவீதமாக குறைத்தது. அதேபோல் உற்பத்தி வளர்ச்சி விகிதமும் வெகுவாக குறைந்துள்ளது.

மேலும் வாகன உற்பத்தித் துறை, சிறு குறு தொழில்கள் துறை பெரும் சரிவைச் சந்தித்துள்ளன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். டிவிஎஸ், அசோக் லேலண்டு உள்ளிட்ட பல மோட்டார் கம்பெனிகள் லே ஆஃப் அறிவித்தன. வேலை இல்லாத் திண்டாட்டம் முன்பை விட அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் கலந்து கொண்டார். அப்போது அவர் வேலைவாய்ப்புகளில் வட இந்தியர்களுக்கு திறமை குறைவு என்ற பொருள்படும் வகையில் பேசினார்.

நாடு முழுவதிலும் வேலைவாய்ப்பிற்கு பஞ்சம் இல்லை. அதே நேரத்தில் வேலை வாய்ப்பை அளிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தகுதியுடைய நபர்களை கண்டு பிடிக்க முடியவில்லை என்று  தெரிவித்தார். வேலை இல்லாத் திண்டாட்டம் உச்சத்தை அடைந்துள்ள நிலையில் அமைச்சரின் இந்த பேச்சு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு வெளியிட்டிருந்த அறிக்கையில்  கடந்த  நாற்பது ஆண்டுகளாக வேலையின்மை அதிகரித்துள்ளது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

click me!