நிறைமாச கர்ப்பிணியாய் நின்னார் ஜெயலலிதா: அத்தை மகள் சொல்லும் ரகசியம்...

 
Published : Dec 03, 2017, 10:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
நிறைமாச கர்ப்பிணியாய் நின்னார் ஜெயலலிதா: அத்தை மகள் சொல்லும் ரகசியம்...

சுருக்கம்

j.jayalalitha had daughter says her close relative lalitha

இத்தனை ஆண்டுகளாய் அரசு விழாக்களிலும், பல பொது நிகழ்வுகளிலும் ’செல்வி ஜெயலலிதா’ என்று அழைக்கப்பட்ட பதத்தை சுக்கு நூறாக உடைத்து பப்படம் செய்து வருகிறது ‘அம்ருதா’வின் விவகாரம். 
இந்த நிலையில் ஜெயலலிதாவின் அத்தை மகளான பெங்களூரு லலிதா, இந்த விவகாரம் பற்றி திருவாய் மலர்ந்து சொல்லியிருக்கும் சில விஷயங்கள் அதிர வைக்கின்றன. 

அதாவது...”நெருங்கிய சொந்தம் என்றாலும் ஜெயலலிதா எங்களுடன் நெருங்கிப் பழகியதில்லை. தனக்கென ஒரு வட்டம் போட்டுக் கொண்டு அதனுள் கெத்தாக இருப்பார். சொந்தம் பந்தம் என்று நெருங்கிப் பழக மாட்டார். அதனால் நாங்களெல்லாம் ஜெயலலிதாவிடமிருந்து ஒதுங்கியே இருந்தோம். அதிலும் சினிமாவை விட்டு அவர் அரசியலுக்கு வந்த பிறகு, எங்கள் யாரையும் அவர் பக்கமே நெருங்கவிடவில்லை சசிகலா.

ஒரு முறை சென்னை சென்றிருந்த எங்கள் பெரியம்மா ஜெயலட்சுமி, ‘ஜெயலலிதாவை பார்த்துவிட்டு வந்தேன்.’ என்று எங்கள் அம்மாவிடம் சொன்னார்கள். உடனே எங்கள் அம்மாவுக்கு கோபம் வந்துடுச்சு. ‘ஏன் அவளை பார்க்கப்போன? அவ மதிக்கமாட்டாளே!’ என்று கோபப்பட்டார். 

உடனே பெரியம்மா ‘இல்ல, ஜெயலலிதாவுக்கு இப்போ அவங்க அம்மா இல்லை. ஏதோ தனியா இருக்கிறாளே, நான் வந்திருக்கிறது தெரிஞ்சு கூப்பிடுறாளேன்னு சொல்லி பார்க்கப்போனேன். அங்கே போனப்பதான் தெரிஞ்சுது. நிறைமாச கர்ப்பிணியா நின்னா. எனக்கு ஒரு மாதிரி ஆயிடுச்சு. கூட இருந்து பிரசவம் பார்த்தேன். அழகான பெண் குழந்தை பிறந்திருக்கு. ஆனா இந்த தகவலை வெளியில் யாருக்கும் சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டா.’ அப்படின்னு சொன்னாங்க. 

இதைக் கேட்டு எங்க அம்மாவுக்கு ஒருமாதிரி ஆயிடுச்சு.” என்றிருக்கிறார். 

லலிதாவிடம், ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது உண்மை என்றால், அவரது கணவர் யார்? என்று கேட்டதற்கு...

“அதுதான் உலகத்துக்கே தெரியுமே, சோபன்பாபுவுடன் ஜெயலலிதா ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்தது.” என்று ஒரே போடாக  போட்டிருக்கிறார். 
என்ன கொடுமைடா நாராயணா!

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!