
யார் இந்த ஜிக்னேஷ் மேவானி ?
பிஜேபி-யின் இரும்பு கோட்டையாக தொடர்ந்து ஆறு முறை ஆட்சியை பிடித்திருக்கும் குஜராத் மாநிலத்தில் தான் ஜிக்னேஷ் மேவானி உள்ளார்
கடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலின் போது, பிஜேபி க்கு ஏற்பட்ட சிறிய பின்னடைவுக்கு காரணமாக ஹர்திக் பட்டேல் என்ற இளைஞரும்,ஜிக்னேஷ் மேவானியும் மிக முக்கிய வகித்து உள்ளனர் .
சாதி,இனத்தை அடிப்படையாகக்கொண்டு,தலித் மக்களுக்காக குஜராத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.அதாவது ஆளும் பாஜக-வை எதிர்த்து குரல் கொடுத்து வந்தனர். இவர்களுடைய பிரச்சாரம்,குஜராத்தில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதை சுதாரித்துகொண்ட காங்கிரசுக்கு இது ஒரு கூடுதல் பலமாக பார்க்கப் பட்டது.இதன் காரணமாக நடந்து முடிந்த குஜராத் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் சற்று கூடுதல் இடங்களை பிடித்து பலமான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றது.
இருப்பினும் ஆறாவது முறையாக பிஜேபி தான் ஆட்சியை கைப்பற்றியது. இருந்தபோதிலும்,வாக்கு சிதைவு ஏற்பட்டு பிஜேபி- க்கு,சற்று பின்னடைவு ஏற்பட்டது.
இந்நிலையில்,தமிழகத்தில் நேற்று வெளியான ஆர்.கே நகர் இடைதேர்தலில் பாஜக வெறும் 1,417 ஓட்டுகளை மட்டுமே பெற்றது.
இதனை கிண்டல் செய்யும் விதமாக, ஜிக்னேஷ் மேவானி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
அதில்,பிஜேபி கட்சிக்கு ஆதரவாக உலகிலேயே அதிக அளவில் மிஸ்டு கால் பெற்ற,அதாவது 50 லட்சம் மிஸ்டு கால் பெற்ற தமிழ்நாட்டில் இருந்து,வெறும் 1,417 வாக்குகளை மட்டுமே பிஜேபி பெற்று உள்ளது. அதுவும் நோட்டா வாக்குகளான 2,373 ஐ விட குறைவானது” என நக்கல் அடித்துள்ளார்.
இந்த பதிவின் மூலம் தமிழகத்திலும் தனி கவனம் செலுத்த முயன்றுள்ளார் ஜிக்னேஷ் மேவானி என பலரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.