முந்தும் பாஜக … காங்கிரஸ் திடீர் பின்னடைவு !! ஜார்கண்ட்டில் ஆட்சி அமைக்கப் போவது யார் ? கடும் சிக்கல் !!

Published : Dec 23, 2019, 09:15 AM ISTUpdated : Dec 23, 2019, 09:32 AM IST
முந்தும் பாஜக … காங்கிரஸ் திடீர் பின்னடைவு !! ஜார்கண்ட்டில் ஆட்சி அமைக்கப் போவது யார் ? கடும் சிக்கல் !!

சுருக்கம்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள்  எண்ணும் பணி தொடங்கியுள்ள நிலையில் தற்போது பாஜக முன்னிலை பெற்றுள்ளது. இதனால் யார் அமைப்பார்கள்  என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர்  ரகுபர்தாஸ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 81 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும், பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

இன்று  காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.  முதலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெறிருந்தது. நேரம் செல்ல செல்ல  காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்தது. தற்போது மொத்தம உள்ள 81 இடங்களில் 80 இடங்களுக்கு முன்னிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பாஜக 34 இடங்கிளிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்கவில்லை. ஜெஎம்வி 3 இடங்களிலும் மற்றவர்கள் 10 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளனர்.

இதனால் ஜெஎம்வி மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்களை கூட்டணியில் சேர்த்துக் கொண்டு ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் பேச்சு வார்த்தையைத் தொடங்கியுள்ளன.

PREV
click me!

Recommended Stories

Tamil Nadu CM Vijay Assembly Speech: தமிழ்நாட்டிற்காக எந்த அவமானத்தையும் தாங்கிக்கொள்வேன்.! சட்டசபையில் அடித்து பேசிய முதல்வர் விஜய்.!
kalaignar karunanidhi: கலைஞரின் வார்த்தை விளையாட்டு.! சொற்களை வீசி சிரிக்க வைத்த வசீகரன்.! பாமர மக்களையும் ரசிக்க வைத்த அல்டிமேட் அரசியல் பேச்சு.!