ஜார்கண்ட் தேர்தல்: முந்தும் காங்கிரஸ் கூட்டணி... கடும் போட்டி அளிக்கும் பாஜக கூட்டணி!

By Asianet TamilFirst Published Dec 23, 2019, 8:23 AM IST
Highlights

காலை 8.15 நிலவரப்படி காங்கிரஸ் கூட்டணி 19 தொகுதிகளிலும்  பாஜக கூட்டணி 14 தொகுதிகளிலும் முன்னிலை வகித்துவருகின்றன. ஜெவிஎம் 3 தொகுதிகளிலும் பிறர் 3 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன. ஜார்கண்டில் மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால், 41 தொகுதிகளில் வெல்ல வேண்டும். தற்போதைய நிலையில் காங்கிரஸ், பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. 

ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பாஜகவும் கடும் போட்டியை அளித்துவருகிறது.
81 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட ஜார்கண்டில் 5 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்தத் தேர்தலில் 65.17 சதவீத வாக்குகள் பதிவாயின. தேர்தலில் பாஜக கூட்டணி ஓர் அணியாகவும், காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் ஓர் அணியாகவும் ஜெ.வி.எம். உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டன. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. வாக்கு எண்ணிக்கைத் தொடங்கியது முதலே காங்கிரஸ், பாஜக கூட்டணி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

click me!