தொடங்கியது வாக்கு எண்ணிக்கை !! ஜார்கண்ட் தேர்தல் முடிவுகள் !! பாஜகவுக்கு பின்னடைவு !!

By Selvanayagam PFirst Published Dec 23, 2019, 8:23 AM IST
Highlights

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள்  எண்ணும் பணி தொடங்கியுள்ள நிலையில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
 

ஜார்கண்ட் மாநிலத்தில் முதலமைச்சர்  ரகுபர்தாஸ் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு 81 இடங்களை கொண்டுள்ள சட்டசபைக்கு நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது.

நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகமாக உள்ள மாநிலமாக இருந்தாலும், பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகின.

இன்று  காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது.  முதல் கட்டமாக  காங்கிரஸ் கட்சி 24  இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் , ஜெஎம்வி 2 இடங்களிலும், மற்றவை 16 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.

முதல் முடிவு மதியம் 1 மணிக்கும், கடைசி முடிவு இரவு 8 மணிக்கும் வெளியாகும் எனத்தெரிகிறது. 

ஜார்கண்டில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது இன்று மாலைக்குள் தெரிய வந்து விடும். தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு ஆதரவாக அமைந்துள்ளன. அவை பலிக்குமா என்பதுவும் இன்று தெரிந்து விடும்.

click me!