விடுதலையாகிறார் ஜெயக்குமார்... அவசரமாக அவரை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்!!

Published : Mar 11, 2022, 04:16 PM IST
விடுதலையாகிறார் ஜெயக்குமார்... அவசரமாக அவரை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்!!

சுருக்கம்

நில அபகரிப்பு உள்ளிட்ட மூன்று வழக்குகளிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் கிடைத்ததை அடுத்து அவர் சிறையில் இருந்து விரைவில் விடுதலை ஆவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

நில அபகரிப்பு உள்ளிட்ட மூன்று வழக்குகளிலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் கிடைத்ததை அடுத்து அவர் சிறையில் இருந்து விரைவில் விடுதலை ஆவர் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சென்னை துரைப்பாக்கதில் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்துவந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, மனு குறித்து காவல்துறை தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அவர் திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள காவல் நிலைத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் நில அபகரிப்பு உள்ளிட்ட மூன்று வழக்குகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமின் கிடைத்துள்ளது. இதனால் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்து விரைவில் விடுதலை ஆவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!