முதலமைச்சர் அதிரடி..! 4 லட்சம் பேருக்கு அரசு வேலை..!

By ezhil mozhiFirst Published Jul 22, 2019, 12:14 PM IST
Highlights

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. இவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முதலமைச்சர் அதிரடி..! 4 லட்சம் பேருக்கு அரசு வேலை..!  

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. இவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார் ஜெகன் மோகன் ரெட்டி. அதன் படி  தற்போது ஆட்சியை பிடித்த ஜெகன், தற்போது 4 லட்சம் ஆந்திர இளைஞர்களுக்கு காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2ம் தேதி பணி ஆணை வழங்க உள்ளார்.

கிராமங்களில் வாழும் 4 ஆயிரம் பேருக்கு ஒரு கிராம தலைமை செயலகம் அமைக்கப்பட உள்ளது. அதாவது 50 வீட்டுக்கு ஒரு தன்னார்வ தொண்டர் என நியமனம் செய்யப்பட உள்ளது. இவருடைய வேலை என்னவென்றால் அந்த கிராமத்தில் வசிக்கக்கூடிய மக்களுக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை எடுத்துக் கூறுவதும், அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவது மிக முக்கிய வேலையாக இருக்கும். இதற்காக பத்தாம் வகுப்பு வரை படித்த நபர்கள் தகுதி தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களுக்கு மாதம் ரூபாய் 5 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோன்று நகர தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் தன்னார்வத்தொண்டர்களுக்கு 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.மேலும் கிராம மற்றும் நகர தன்னார்வ தொண்டர்களை கண்காணிக்க கண்காணிப்பாளர் ஒருவரும் நியமிக்க உள்ளனர்.

இந்த மிக சிறந்த திட்டத்தின் மூலம் கிராமங்களில் மட்டும் 99 ஆயிரத்து 144 பேர் வேலை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று நகரங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் 34 ஆயிரத்து 345 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆந்திராவில் 13 மாவட்டங்கள் இருக்கின்றது. ஆனால் பாராளுமன்ற தொகுதி அடிப்படையில்  மாவட்டங்கள் உருவாக்கப்பட்டால் 25 மாவட்டங்களாக உருவாகும். அதன்படி பார்த்தால் நிறைய பேருக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க... தற்போது அரசு அலுவலகங்களில் வேலை செய்துவரும் 1,33, 494 பேருக்கு பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளது. இவை அனைத்தையும் ஒன்றாக வைத்துப் பார்க்கும்போது 4 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்க உள்ளது என்பது கூடுதல் தகவல்.

இது தவிர மக்கள் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  துப்புரவு தொழிலாளர்கள் நிரந்தர பணி அமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வாரத்திற்கு ஒருமுறை கலெக்டரை பார்த்து மனு கொடுக்கலாம். மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நேரடியாக முதல்வரை சந்தித்து மனு கொடுக்கலாம். இது போன்ற பல்வேறு நடவடிக்கையை ஜெகன் மோகன் ரெட்டி செய்து வருவதால் மக்கள்  மத்தியில் நல்ல பெயர் எடுக்க தொடங்கி  உள்ளார். 

click me!