பாஜகவுக்கு தூது விட்ட 4 திமுக எம்.பி.,க்கள்..? தமிழகத்தில் கரம் வைக்கும் மோடி..!

Published : Jul 22, 2019, 12:06 PM IST
பாஜகவுக்கு தூது விட்ட 4 திமுக எம்.பி.,க்கள்..? தமிழகத்தில் கரம் வைக்கும் மோடி..!

சுருக்கம்

பிரதமர் மோடியிடம் நெருக்கமாக உள்ள வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கரிடம் ஏற்கனவே 4 எம்.பிக்கள் தூது விட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. 

வாரிசு அரசியலை உருவாக்க மாட்டேன் எனச் சொல்லிவிட்டு உதயநிதியை அரசியலில் கொண்டு வந்தார் தி.மு.க தலைவர் ஸ்டாலின்.
இதனால், திமுகவின் சீனியர்கள் சிலர் கட்சித் தலைமை மீது அதிருப்தி அடைந்துள்ளனர். திமுக, எம்.பி.,க்கள் மீது வழக்குகள் உள்ளதால் எந்நேரமும் இடைத்தேர்தல் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறப்படுகிறது. 

என்.ஐ.ஏ.அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத்திற்கு ஆதரவாக தி.மு.க வாக்களித்தது இஸ்லாமியர்களை கொதிப்படைய செய்துள்ளது. இங்கு ஒரு முகம் அங்கு முகம் என தி.மு.கவை ஓரங்கட்டி வருகின்றனர் இஸ்லாமியர்கள். இதனால் தி.மு.கவில் இருந்தால் மரியாதையும் இல்லை அதிகாரமும் இல்லை என புலம்பி வருகின்றனர் திமுக மூத்த தலைவர்கள். 

திமுகவை சேர்ந்தவர்களின் பார்வை பா.ஜ.க மீது திரும்பியுள்ளதாக தகவல். பிரதமர் மோடியிடம் நெருக்கமாக உள்ள வெளியுறவு துறை அமைச்சர் ஜெய் சங்கரிடம் ஏற்கனவே 4 எம்.பிக்கள் தூது விட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதே போல் அதிருப்தியில் உள்ள தி.மு.கவின் மூத்த தலைவர்கள் டெல்லி வட்டாரங்களுடன் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆக மொத்தத்தில் கர்நாடக அரசியலை அடுத்து பாஜகவின் கை தமிழகத்தின் மீது நீள உள்ளது என்கிறார்கள்.   
 

PREV
click me!

Recommended Stories

மோடிக்காக காரை ஓட்டிய முஹமது நபியின் 42 வது நேரடி தலைமுறை ஜோர்டான் இளவரசர்..!
EVM எந்திரம் பிராடு இல்லை..! நான் 4 முறை வெற்றிபெற்றுள்ளேன்.. காங்கிரஸ் எம்.பி., சுப்பிரியா சுலே ஆதரவு