பாஜகவில் இணையும் தமிழகத்தின் முக்கிய பெண் பிரமுகர் !! காத்திருக்கும் பதவி !!

Selvanayagam P   | others
Published : Dec 14, 2019, 08:00 AM ISTUpdated : Aug 15, 2020, 08:30 AM IST
பாஜகவில் இணையும் தமிழகத்தின் முக்கிய பெண்  பிரமுகர் !! காத்திருக்கும் பதவி !!

சுருக்கம்

கணவர்  பிரின்ஸ் கொலை வழக்கில், சரவணபவன் ஓட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை விதிக்க காரணமாக இருந்த, ஜீவஜோதி விரைவில் பாஜகவில் இணைய உள்ளார்.  

தஞ்சையைச் சேர்ந்த ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில், ஓட்டல் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் மீது, புகார் அளித்தார் ஜீவஜோதி. தொடர்ந்து, 20 ஆண்டுகள் சட்ட போராட்டம் நடத்தி, ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை வாங்கி கொடுத்தார்.ஆனால் ராஜகோபால் ஜெயிலுக்கு போவதற்கு முன்பே மரணடடைந்தார்.

தற்போது, தஞ்சை, ரஹ்மான் நகரில், மகளிர் தையலகம் நடத்தி வரும்  ஜீவஜோதி,  பாஜகவில் சேர இருப்பதாகவும், அதற்கான பேச்சு முடிந்து விட்டதாகவும், அக்கட்சி  வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வரும் ஜீவஜோதி, நெருக்கமானவர்களிடம் மட்டும் அதைப் பற்றி விவாதிப்பார். கடந்த வாரம், பாஜக பொதுச் செயலர் வானதி சீனிவாசனை சந்தித்த ஜீவஜோதி, பல்வேறு விவகாரங்கள் பற்றி பேசியுள்ளார். 

ஒரு வாரத்தில், அவர் கட்சியில் இணையப் போவதாகவும், அதன் பின், அவருக்கு முக்கிய பதவி கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அமித்ஷா ஆர்டர்.. இபிஎஸ் வீட்டுக்கு சென்ற நயினார்.. கூடுதல் சீட், ஓபிஎஸ்ஸை சேர்க்க நெருக்கடி?
நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!