ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான காவல்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று..!

Published : Jul 24, 2020, 10:44 AM IST
ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதான காவல்துறை அதிகாரிக்கு கொரோனா தொற்று..!

சுருக்கம்

 சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரைக்கு தற்போது கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் விசாரணை செய்யப்பட்டோர் வழக்கில் தொடர்புடையவர்கள் அச்சத்தில் உள்ளனர். 

சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரித்த 4 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரைக்கு தற்போது கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரணை செய்ய 8 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் கடந்த 10 ஆம் தேதி டெல்லியில் இருந்து மதுரை வந்தனர். அவர்கள் சாத்தான்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதலில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களிடம் விசாரணை மேற்கொண்ட அவர்கள் அதன் பின்னர் மேலும் 3 காவலர்களிடம் விசாரணை நடத்தினர். இதனிடையே நேற்று முன்தினம் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனைதொடர்ந்து அனைத்து அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 2 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா உறுதியானது.

இந்நிலையில் தற்போது வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் பால்துரைக்கு தற்போது கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் விசாரணை செய்யப்பட்டோர் வழக்கில் தொடர்புடையவர்கள் அச்சத்தில் உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

மரத்துல ஏறாதீங்க... புதுச்சேரிக்கு தமிழகத்தை சேர்ந்த யாரும் உள்ளே வரக்கூடாது..! தவெக தலைமை உத்தரவு..!
ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!