
தமிழக காங்கிரஸ் தலைவர்கள் இப்போது ‘இந்தம்மாவா இப்படி?’ என்று கடுப்போடு பார்க்கும் கேரக்டர் யார்? என்றால் அது ஜெயந்தி நடராஜன் தான்.
காரணம்?...
மன்மோகன் சிங் அமைச்சரவையில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் தனிப்பொறுப்பு அமைச்சராக ஆவர்த்தனம் செய்தவர் ஜெயந்தி நடராஜன். சிதம்பரம் அணி, இளங்கோவன் அணி என்றில்லாமல் ‘ஜெயந்தி அணி’ என்று தனி லாபி செய்தபடியிருந்தார். ஆட்சியிலிருந்தபோதே இவருடைய ஏதோ சில செயல்கள் சில பிடிக்காமல் ராகுல் கோபப்பட்டார். விளைவு பதவியிலிருந்து இறக்கப்பட்டார் ஜெயந்தி.
ஆனாலும் கூட தனது தனி லாபியை தொடர்ந்து செய்தபடி டெல்லிக்கும், சென்னைக்குமாய் பறந்து அரசியல் செய்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் ஆட்சி மாறி, காட்சிகள் மாறின. பி.ஜே.பி.யின் அரசு வந்தமர்ந்தது. அதன் பிறகு சைலண்டாகி போன காங்கிரஸ் பிரமுகர்களில் ஜெயந்தி நடராஜனும் முக்கியமானவரானார். ஆனால் சமீப காலமாக ரெய்டு சுனாமியை உசுப்பிவிட்டிருக்கும் மத்திய அரசு ஜெயந்தி நடராஜனின் சொத்துக்களை குறி வைத்து இரண்டு முறை ரெய்டு நடத்தியது. வந்தமர்ந்த அதிகாரிகள் சொத்து ஆவணங்களை வரிக்கு வரி மேய்ந்து ஆய்வு செய்தனர், அள்ளிச் சென்றனர்.
இந்நிலையில் வருமான வரித்துறை ரெய்டின் வீரியத்தை குறைக்க டெல்லி சென்று தங்கி தனக்கு அறிமுகமானவர்கள் மூலம் பி.ஜே.பி.க்கு தூது விட்டுப்பார்த்தாராம், ஆனால் எந்த பலனுமில்லை. அதாவது ஜெயந்தி பி.ஜே.பி.யில் இணைய முயன்றார் ஆனால் அது பலிக்கவில்லை என்கிறார்கள்.
ஜெயந்தியின் இந்த மூவ்கள் ராகுலுக்கும் தெரிந்துவிட்டதாம். இதனால் காங்கிரஸிலும் ஜெயந்திக்கு காங்கிரஸிலும் மவுசு வெகுவாக குறைந்துவிட்டது என்கிறார்கள்.
ஆக மொத்தத்தில் காங்கிரஸிலும் அதிகாரம் செலுத்த முடியாமல், பி.ஜே.பி.யிலும் காலூன்ற முடியாமல் நடு ஆற்றில் நிற்கிறாராம் ஜெயந்தி.