நான் செப்.22 ஊர்லையே இல்லைங்கோ...!!! - எஸ்கேப்பாகும் ஜெ.அண்ணன் மகன் தீபக்...

First Published Sep 28, 2017, 2:59 PM IST
Highlights
Jayalalithaas brother Deepak said that she was not in Chennai on September 22nd so I went to Apollo hospital on Sep.24.


ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட செப்.22-ம் தேதி நான் சென்னையில் இல்லை எனவும் செப்.24-ம் தேதியே அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றேன் எனவும் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார். 

மேலும் மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது ரமமோகன ராவ் உடனிருந்தார் என்றும் தீபக் கூறினார். 

ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், தற்போது ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி  அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது தயாரிக்கப்பட்ட பேஷண்ட் கேர் ரிப்போர்ட்டின்  தகவல்கள் வெளியாகி உள்ளது. 

அதில், செப்டம்பர் 22 ஆம் தேதி இரவு 10 மணிக்கு போயஸிலிருந்து அப்பல்லோவுக்கு அழைப்பு போயுள்ளதும் 10.01 க்கு மூன்று மருத்துவர்கள் அடங்கிய ஆம்புலன்ஸ் அப்பல்லோவிலிருந்து போயஸ் நோக்கி கிளம்பியதும் தெரிய வந்துள்ளது. 

இரவு 10.05 க்கு ஆம்புலன்ஸ் போயஸ் கார்டனை வந்தடைந்த போது, போயஸ் கார்டன் இல்லத்தின் முதல்மாடியில் தனது அறையில் மயங்கிய நிலையில் ஜெயலலிதா இருந்திருக்கிறார்.

இதையடுத்து ஜெவிற்கு பரிசோதனை செய்யப்படுகிறது. அப்போது, ஜெயலலிதாவின் பிபி அளவு 140/70 ஆகவும், சாச்சுரேஷன் 48 ஆகவும், இருந்திருக்கிறது. சர்க்கரையின் அளவு 508 ஆக இருந்ததாக ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

ஆனால் ஜெவின் உடலில் காயங்களோ புண்களோ இல்லை என குறிப்பிடபட்டிருக்கிறது. மேலும் பிரீத்திங் அளவு நார்மல் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

10: 25க்கு ஜெயலலிதாவுடன் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா.

இதனிடையே ஜெயலலிதாவிற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது எனவும் 3 நாட்கள் மட்டுமே ஜெயலலிதா சுயநினைவில் இருந்ததாகவும், மீதி நாட்கள் மயக்க நிலையிலேயே இருந்ததாகவும் ஜெயலலிதா அண்ணன் மகன் தீபக் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தீபக், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட செப்.22-ம் தேதி நான் சென்னையில் இல்லை எனவும் செப்.24-ம் தேதியே அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றேன் எனவும் தெரிவித்தார். 

மேலும், மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது ரமமோகன ராவ் உடனிருந்தார் என்றும் தீபக் கூறினார். 
 

click me!