
ஜெயலலிதா இருந்திருந்தால் இப்போது விஜய் இருந்திருக்க மாட்டார் எனத் தெரிவித்துள்ளார் தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி.
இதுகுறித்து அவர் பேசுகையில், ‘‘நடிகர் விஜய் நடத்தியது பொதுக்குழு அல்ல. அது ஒரு சினிமா ஷூட்டிங் ஸ்பாட். எங்களுக்கு தெரிந்து அது ஷூட்டிங் ஸ்பாட் மாதிரிதான் இருந்தது. அந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆதங்கத்தை நடிகர் விஜய் பேசுவதை விட அங்கே இருக்கக் கூடிய சில குண்டர்கள், சில அண்ணன்மார்கள் தான் அதிகமா பேசுனாங்க.
அதாவது அந்த பொதுக்குழு கூட்டத்தில் சில விஷயங்கள் எல்லாம் கருத்துக்கள், விமர்சனங்கள் என்ற போர்வையில் அவர்கள் பேசினார்கள். கரூர் சம்பவத்தில் அந்த 41 பேர் வந்து மரணம் அடைந்தார்கள். அந்த சம்பவம் அதிமுக ஆட்சி காலத்தில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக இருந்திருந்தார் என்றால் இந்நேரம் தவெகவின் பொதுக்குழு கூட்டம் நடந்து இருக்காது. அடுத்தடுத்து நடத்தக்கூடிய அரசியல் கட்சி மீட்டிங் நடந்து இருக்காது. ஏனென்றால் அந்த அம்மா அந்த சம்பவம் நடந்த அந்த ஏரியா பார்டரை விட்டு தாண்ட விட்டு இருக்க மாட்டாங்க.
ஏனென்றால், அவர் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார். விஜயை உள்ளே தூக்கி வைச்சி நொங்கு நொங்கு என நொங்கி இருப்பார். அந்த அளவுக்கு சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார். திமுக அமைப்பு என்பதால் தான் இன்னைக்கு திரும்பத் திரும்ப விஜயையும், அவரது கட்சியினரையும் பேச விட்டு, பேச விட்டு அமைதியாக இருந்து அழகு பாக்கிறார்களே தவிர, தொடர்ச்சியாக திமுக கட்சியும், தமிழ்நாடு அரசும் ரவுடி போல செயல்பட்டு இருந்தார்கள் என்றால், ஒரு ரவுடி கட்சியாக இருந்திருந்தால் இந்நேரம் நீலாங்கரையில் ஒரு மர்மமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார் பாருங்கள் நடிகர் விஜய். அந்த மர்மங்களை உடைத்து தமிழ்நாட்டு மக்களுக்கு வெட்ட வெளிச்சமாக்கி இருப்பார்கள்.
நடிகர் விஜய் சிபிஐ விசாரணையில் எல்லாமே தெரிஞ்சிடும் என்கிறார். சிபிஐ விசாரணையில் இன்றைக்கு யாரால் அந்த 41 உயிர்கள் மரணம் அடைந்தார்கள், எதனால் மரணம் அடைந்தார்கள். யார் மீது தவறு இருக்கிறது? அப்போது நாட்டு மக்கள் விஜய்க்கு எதிராக திரும்புவார்களா? 2026 பிறகு நடிகர் விஜய் ஃபாரின் ட்ரிப்புக்கு ஓடப்போகிறாரா? இல்லை சினிமாத்துறைக்கு ஓடப்போகிறாரா? என்பது தெரியும்’’ எனக்கூறியுள்ளார்.