'ஈழத் தமிழர்கள் பற்றி என்னிடம் ஜெயலலிதா சொன்ன ரகசியம்...' போட்டுடைத்த சீமான்..!

Published : Dec 05, 2019, 12:09 PM IST
'ஈழத் தமிழர்கள் பற்றி என்னிடம் ஜெயலலிதா சொன்ன ரகசியம்...' போட்டுடைத்த சீமான்..!

சுருக்கம்

இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி, சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க சென்றிருந்தேன்.

அமெரிக்க முன்னாள் அமைச்சர் ஹிலாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர்கள் குறித்து 45 நிமிடங்கள் ஜெயலலிதா பேசியது பற்றி, தன்னிடம் தெரிவித்தாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் மூன்றாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் அவரது நினைவுகளை பலரும் பகிர்ந்து வருகின்றனர். அதேபோல் சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசிய போது, ஜெயலலிதா பற்றிய நினைவலைகளை பகிர்ந்து கொண்டார்.

அப்போது, ‘’ஜெயலலிதாவை வை நேரில் சந்தித்தபோது என்னிடம் அன்பாகவும் பரிவாகவும் பேசினார். அந்த நினைவுகள் நீங்காமல் உள்ளது. இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும் ராஜபக்ச ஒரு போர் குற்றவாளி, சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியதற்காக ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்க சென்றிருந்தேன்.

என்னிடம் ஈழம் மற்றும் ஈழத் தமிழர்கள் குறித்து ஜெயலலிதா நிறைய பேசினார். ஹிலாரி கிளின்டன் தன்னை சந்தித்தபோது 45 நிமிடம் ஈழத் தமிழர்கள் பிரச்சனை குறித்து பேசியதாக ஜெயலலிதா தெரிவித்தார்.  நாட்டின் வெளியுறவு கொள்கையில் மாற்றம் வராமல் மக்களுக்கு எதுவும் செய்ய முடியாது. எல்லாரும் சேர்ந்து போராடி வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டு வருவோம் என்றார் ஜெயலலிதா. இவை எல்லாம் என்னுடைய நினைவில் இருக்கிறது. ஜெயலலிதாவிற்கு என்னுடைய புகழ் வணக்கத்தை செலுத்துகிறேன்’’எனத் தெரிவித்தார். 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி