
ஜெயலலிதா, உறவினர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை என்றும், ஜெயலலிதாவின் தந்தை உயிரிழப்புக்கு அவரது தாயார்தான் காரணம் என்றும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை ஜெ.யின் அத்தை லலிதா கூறியுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா, தான் ஜெயலலிதாவின் மகள் தான் என்றும், இது குறித்து டி.என்.ஏ. பரிசோதனை செய்தார் உண்மை வெளியாகும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அம்ருதாவை, சென்னை அல்லது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யம்படி அறிவுறுத்தியது. இந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் உறவினர், ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பதாகவும் அது அம்ருதா என்பது தனக்கு தெரியாது என்றும் கூறியிருந்தார். இதையடுத்து ஓரிரு தினங்கள் கழித்து, ஜெயலலிதாவின் மகள் அம்ருதா என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு லலிதா பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவுக்கு 1980 ஆம் ஆண்டு பிரசவம் பார்த்தது எனது பெரியம்மாதான் என்றார். திருமணத்துக்கு முன்பே ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது என்றும், குழந்தை பிறந்தது சசிகலாவுக்கும் தெரிந்திருக்கும் என்றும் லலிதா கூறினார்.
ஜெயலலிதாவின் தந்தையின் முதல் மனைவியின் மகனான வாசுதேவனுடன் தான் பேசியதில்லை என்ற அவர் வாசுதேவன் சொல்வது பொய் என்றும் தெரிவித்தார். வாசுதேவனுக்கும் ஜெயலலிதாவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றும், ஜெயலலிதாவின் சொத்துக்கள் வாசுதேவனுக்கு சொந்தமில்லை என்றும் கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் வாரிசு அம்ருதா என்று நான் எந்த டிவி சேனலிலும் கூறவில்லை என்றும், டி.என்.ஏ. டெஸ்ட் மூலம் நிரூபிக்கட்டும் என்று கூறியதாகவும் தெரிவித்தார். அம்ருதாவை வளர்த்தது சைலஜாதான். அம்மா, அப்பா யார் என்று நிரூபித்துக் கொள்ளட்டும். ரஞ்சினியும் அம்ருதாவும் என்னை வந்து பார்த்ததை அடுத்தே தான் கையெழுத்து போட்டதாகவும் கூறினார்.
அம்ருதாவை வளர்த்த ஷைலஜாவும் சந்தியாவுக்கு பிறந்தவர்தான். ஆனால், ஷைலஜாவின் தந்தை வேறொருவர் என்றும் அது ஜெயராமன் இல்லை என்றும் கூறினார். இந்த விவகாரம் ஜெயலலிதா உயிரோடு இருந்தபோதே எழுந்ததாகவும் லலிதா தெரிவித்தார்.
ஜெயலலிதா, உறவினர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை என்றும், ஜெயலலிதாவின் தந்தை உயிரிழப்புக்கு அவரது தாயார்தான் காரணம் என்றும் திடுக்கிடும் தகவல்களை லலிதா கூறினார்.