
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக
சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், நாகை வெள்ளப்பள்ளம் கிராமத்தில் ரூ.100 கோடியில் மீன்பிடி துறைமுகம், தரஙகம்பாடி கிராமத்தில் ரூ.120 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.
குமரியில் 3 மீன் இறக்கு தளங்கள் ரூ.12 கோடியில் செலவில் அமைக்கப்படும். கேசவன்புத்துறை மீனவர்களின் வாழ்வாதரம் மேம்படுத்த நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் மீன்வளத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது, திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.