ஜெ.வுக்கு பிறந்தது ஒன்று இல்லையாம்... இரண்டாம்! அடுத்த அணுகுண்டை போட்ட ஜெ. அண்ணன்!

 
Published : Dec 04, 2017, 12:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:32 AM IST
ஜெ.வுக்கு பிறந்தது ஒன்று இல்லையாம்... இரண்டாம்! அடுத்த அணுகுண்டை போட்ட ஜெ. அண்ணன்!

சுருக்கம்

Jayalalithaa 2 children - says Vasudevan

ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் குழந்தை பிறந்தது உண்மைதான் என்றும் ஜெயலலிதாவுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்ததாகவும் ஜெயலலிதாவின் அண்ணன் என்று கூறிக் கொள்ளும் வாசுதேவன் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா, தான் ஜெயலலிதாவின் மகள் தான் என்றும், இது குறித்து டி.என்.ஏ. பரிசோதனை செய்தார் உண்மை வெளியாகும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், அம்ருதாவை, சென்னை அல்லது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யம்படி அறிவுறுத்தியது. இந்த நிலையில்தான் ஜெயலலிதாவின் உறவினர், ஜெயலலிதாவுக்கு மகள் இருப்பதாகவும் அது அம்ருதா என்பது தனக்கு தெரியாது என்றும் கூறியிருந்தார். இதையடுத்து ஓரிரு தினங்கள் கழித்து, ஜெயலலிதாவின் மகள் அம்ருதா என்றும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

ஜெ.வின் உறவினரான லலிதா, தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, ஜெயலலிதாவுக்கு 1980 ஆம் ஆண்டு பிரசவம் பார்த்தது எனது பெரியம்மாதான் என்றார். திருமணத்துக்கு முன்பே ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது என்றும், குழந்தை பிறந்தது சசிகலாவுக்கும் தெரிந்திருக்கும் என்றும் லலிதா கூறினார். 

ஜெயலலிதாவின் அண்ணன் என்று அழைத்துக் கொள்ளும் வாசுதேவன், மைசூரில் உள்ள டி.நரசிபுரா தாலுக்கா, ஸ்ரீரங்கபுராவில் வசித்து வருகிறார். தனியார் டிவி சேனல் ஒன்றுக்கு வாசுதேவன் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபுவுக்கும் குழந்தை பிறந்தது உண்மைதான் என்றார். 

அந்த குழந்தையை ஐதராபாத்தில் வைத்து காப்பாற்றினார்கள் என்றும், அவருக்கு ஜெயலலிதாதான் திருமணம் செய்து வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அந்த குழந்தை எங்கே இருக்கிறது என்பது தெரியவில்லை என்றும் வாசுதேவன் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் ஜெயலலிதாவுக்கு 2 குழந்தைகள் பிறந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு சென்னையில் பிரசவம் பார்த்தார்கள் என்று லலிதா கூறுவது தவறான தகவல் என்றும், ஜெயலலிதா எங்கள் குடும்ப உறுப்பினர்கள் யாரோடும் தொடர்பு வைத்துக் கொள்ளவில்லை என்றும் கூறினார்.

ஜெயலலிதாவுக்கும் சோபன்பாபு மூலம் குழந்தை பிறந்தது என்று சசிகலாவுக்கும், நடராசனுக்கும் நிச்சயம் தெரியும் என்றும் இப்போது தீபா, தீபக், நானும்தான் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு என்றும் வாசுதேவன் கூறினார். எனது தம்பி மகளான தீபா, என்னுடன் பேசுவதில்லை என்ற வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவுக்கு குழந்தை பிறந்தது குறித்து சசிகலாவுக்கும் நடராஜனுக்கும் தெரியும் என்று லலிதாவும், வாசுதேவனும் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!