ச்சி போ.. என் மூஞ்சிலியே முழிக்காதே".. ஓபிஎஸ்சை விரட்டிய ஜெயலலிதா.. பன்னீரை அசிங்கப்படுத்திய நத்தம் விஸ்வநாதன்

Published : Jul 11, 2022, 02:34 PM ISTUpdated : Jul 11, 2022, 02:43 PM IST
ச்சி போ.. என் மூஞ்சிலியே முழிக்காதே".. ஓபிஎஸ்சை விரட்டிய ஜெயலலிதா.. பன்னீரை அசிங்கப்படுத்திய நத்தம் விஸ்வநாதன்

சுருக்கம்

ச்சீ போ, என் முகத்திலேயே முழிக்காதே என செல்வி ஜெயலலிதாவால் பன்னீர்செல்வம் விரட்டப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து 6 மாத காலம் அவருடன் பேசாமலேயே அவர் இருந்ததாகவும் ஓபிஎஸ் குறித்து நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். 

ச்சீ போ, என் முகத்திலேயே முழிக்காதே என செல்வி ஜெயலலிதாவால் பன்னீர்செல்வம் விரட்டப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து 6 மாத காலம் அவருடன் பேசாமலேயே அவர் இருந்ததாகவும் ஓபிஎஸ் குறித்து நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். அதிமுக பொதுக்குழு மேடையில் அவர் இவ்வாறு பேசினார்.

நீண்ட களேபரங்களுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இன்று எடப்பாடி பழனிச்சாமி  இடைக்கால பொதுச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். மறுபுறம் ஓ. பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்தை  கைப்பற்றியதால் அங்கு இருதரப்பு ஆதரவாளர்களுக்கும் இடையே வன்முறை வெடித்தது.

இந்த பரபரப்புக்கு மத்தியில் ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுக பொதுக்குழு மேடையில் வைத்து நத்தம் விசுவநாதன் கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசிய விவரம் பின்வருமாறு:- சீப்பை எடுத்து ஒளித்து விட்டால் திருமணத்தை நிறுத்திவிடலாம் என நினைப்பவர்களின் சூழ்ச்சியை முறியடித்து பொதுக்குழு நடைபெறுகிறது. 

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ்... அதிமுக அலுவலகத்தில் கேவலமான வேலை செய்யலாமா.?? பன்னீரை டார் டாரா கிழித்த கே.பி முனுசாமி.


 
 
இப்போது ஜெயலலிதாவின் வழியில் மூன்றாவது தலைவர் நமக்கு கிடைத்துவிட்டார். திமுக அரசை வேரோடும் வேரோடு மண்ணோடும் நீக்கும் ஆற்றல் படைத்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. இனி அதிமுகவிற்கு பொற்காலம்தான், திமுகவிற்கு இறங்குமுகம் தொடங்கிவிட்டது, இனி திமுகவுக்கு வளர்ச்சியே கிடையாது. தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி உருவாக்குவார். பன்னீர்செல்வத்தை பொருத்தவரையில் மற்றவர்களைவிட எனக்கு கூடுதலாகவே தெரியும், அவருக்கு இன்னொரு முகம் உள்ளது அது கொடூரமான முகம். மக்களிடம் அன்பாக பேசுவது போல நடிப்பார் அது முழுக்க முழுக்க நடிப்புதான்.

இதையும் படியுங்கள்:  அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்..! அதிரடியாக தீர்மானம் கொண்டு வந்த இபிஎஸ் அணி

ஆனால் அவரின் பேச்சுக்கும் செயலுக்கும் சம்பந்தமே இருக்காது. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார். அவருடைய உறவை முறித்துக் கொண்டது எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. தன்னையே அவர் நம்பமாட்டார். ஓ.பன்னீர்செல்வம் யாரையும் வாழ விடமாட்டார். அதிக பொறாமை பிடித்தவர், சூழ்ச்சி செய்பவர், துரோகம் செய்ய தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டார். எனது அனுபவத்தின் மூலம் இதை நான் அறிந்து சொல்கிறேன், ஏதோ ஜெயலலிதாவால் மிகவும் பாராட்டப்பட்டவர் போல அவர் பிம்பத்தை உருவாக்கி வைத்துள்ளார். ஜெயலலிதாவால் " ச்சீ போ என்று திட்டு வாங்கியவர் தான் ஓபிஎஸ்"  ஆனால் ஜெயலலிதாவிடம் பாராட்டு வாங்கியதாக மாயத்தோற்றத்தை ஏற்படுத்துகிறார்.

ஓபிஎஸ்சை என் முகத்திலேயே முழிக்காதே போ என்று விரட்டியவர் ஜெயலலிதா, அதன் பிறகு அவரிடம் ஆறு மாத காலம் வரை பேசாமலேயே இருந்தார். இனியும் மக்கள் ஓபிஎஸ்சை நம்பத் தயாராக இல்லை, அவர் மக்களை ஏமாற்ற முடியாது. ஜெயலிதா மீது உண்மையிலேயே பற்று இருந்தால் அவருடைய சேலையை கிழித்த துரைமுருகனை இந்திரன், சந்திரன் என்ற பாராட்டுவாரா? ஆனால் துரைமுருகனை பாராட்டாமல் ஜெயலிதாவின் உண்மை தொண்டன் என்பதை எடப்பாடி பழனிச்சாமி நிரூபித்துவிட்டார்.

நிச்சயம் ஓ பன்னீர் செல்வத்தை ஜெயலிதாவின் ஆன்மா மன்னிக்காது. தற்போது ஓ.பன்னீர்செல்வம் அரசியல் அனாதையாகி விட்டார் அவர் ஒரு துரோகி, அவரை ஒருபோதும் மன்னிக்க முடியாது ஓ பன்னீர் செல்வத்தின் கதை இன்றுடன் முடிந்து விட்டது. எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆகும் வரை நாம் ஓயக்கூடாது. அனைவரும் அதற்கு உறுதி ஏற்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். 
 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி