ஒரு மூனு நாள் கேப்பில் பெரிய சான்ஸ் மிஸ் ஆயிடுச்சு… கருணாஸ் வெளியிட்ட ஜெயலலிதா ரகசியம் !!

By Selvanayagam PFirst Published Oct 3, 2018, 4:28 PM IST
Highlights

உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதிக்குப் பதில்  25 ஆம் தேதி அட்மிட் ஆகியிருந்தால் நான் இந்நேரம் அமைச்சராகியிருப்பேன் என கருணாஸ் எம்எல்ஏ அதிரடியாக தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். அதிமுக இரண்டாக உடைந்தது. இபிஎஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் ,  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், காவல் துறையினரையும் அவதூறாக பேசியதாக 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்து வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இதனிடையே கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவலில்  நிகழ்ந்த ஒரு மோதலில் தேவர் பேரவைச் சேர்ந்த முத்தையா என்பவரது கார்  சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புளியங்குடி காவல்நிலைத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் கருணாஸை கைது செய்ய நெல்லை மாவட்ட போலீசார்  இன்று சென்னை  வந்துள்ளனர்.

ஆனால் கருணாஸ் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யும் போலீஸ் நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காகவே கருணாஸ் மருத்துவமனையில் படுத்துக் கொண்டார் என கூறப்படுகிறது.

இதனிடையே தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த கருணாஸ் உடல்நலக்குறைவு காரணமாக ஜெயலலிதா செப்டம்பர் 22 ஆம் தேதிக்குப் பதில்  25 ஆம் தேதி அட்மிட் ஆகியிருந்தால் நான் இந்நேரம் அமைச்சராகியிருப்பேன் என அதிரடியான ரகசியம் ஒன்றை வெளியிட்டார். தன்னை அமைச்சராக அறிவிக்க ஜெயலலிதா முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் அதற்குள் ஜெயலலிதா உடல்நல்ம் குன்றி மறைந்துவிட்டதாகவும் ஆதங்கத்துடன் தெரிவித்தார்.

click me!