"சென்று வாருங்கள் முதல்வரே" - உருகிய மெய்க்காவலர் பெருமாள் சாமி

Asianet News Tamil  
Published : Dec 07, 2016, 06:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:37 AM IST
"சென்று வாருங்கள் முதல்வரே" - உருகிய மெய்க்காவலர் பெருமாள் சாமி

சுருக்கம்

முதல்வருடன் பல ஆண்டுகள் ஒன்றாகவே அவருடன் பாதுகாவலராக பணியாற்றி அவர் இறக்கும் வரை ஒன்றாக அவருக்கு பாதுகாப்பு அளித்த முதல்வரால் அப்பு என்று அன்போடு அழைக்கப்பட்ட ஏடிஎஸ்பி பெருமாள் சாமி முதல்வரின் இறுதி வழியனுப்பு விழாவில் சமாதியில் கடைசியாக அவருக்கு உருக்கமுடன் விடை கொடுத்தது காண்போர் நெஞ்சை கலங்க வைத்தது.

முதல்வர் ஜெயலலிதா 1991 முதல் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வருகிறார்  , இடையில் சில வருடங்கள் இல்லாவிட்டாலும் முதல்வர் ஜெயலலிதாவின் சிறப்பு பாதுகாப்பு பிரிவில் (கோர்செல்) ஏடிஎஸ்பியாக இருப்பவர் பெருமாள் சாமி. 

ஜெயலலிதா பாதுகாப்பு வாகனமான கான்வாயில் முக்கிய தலைமை அதிகாரி இவர். இவரன்றி ஒரு அணுவும் அசையாது. ஜெயலலிதா ஒரு இடத்துக்கு செல்கிறார் என்றால் முதலில் பெருமாள் சாமி தான் அந்த இடத்தை சென்று பார்வையிட்டு ஓக்கே சொன்ன பிறகே ஜெயலலிதா வருவார்.

அவ்வளவு தூரம் முதல்வரின் எண்ணமறிந்து செயல்பட்டவர் பெருமாள் சாமி. முதல்வர் ஒரு இடத்துக்கு செல்கிறார் என்றால் பொதுமக்கள் , தொண்டர்கள் இடையே இறங்கி வேகமாக முதல்வர் காருடன் வேகமாக ஓடிவருவார். 

முதல்வர் வாகனம் நின்றவுடன் அவரது எண்ணமறிந்து செயலாற்றுவார். விஐபிக்கள் , தொண்டர்கள் யாராக இருந்தாலும் பெருமாள் சாமி முதல்வர் கண்ணசைவை நோக்கியே செயலாற்றுவார்,. கச்சிதமாக இருக்கும். 

பெருமாள் சாமி மட்டுமல்ல அவருக்கு கீழ் உள்ள காவலர்களும் பெருமாள் சாமியின் எண்ணம்றிந்து இயங்குவார்கள். முதல்வரின் பாதுகாவலராக பல ஆண்டுகள் அன்புக்குரியவராக விளங்கிய பெருமாள் சாமி முதல்வர் முதுமலை வனவிலங்கு சரணாலயத்தில் குட்டி யானையால் தாக்கப்பட்டு கீழே விழுந்தபோது தாங்கி பிடித்தார். 

முதல்வரின் பாதுகாவலராக மட்டும் அல்லாமல் அவரது விசுவாசியாக மாறிப்போனார்கள் பாதுகாவலர்கள். அவரை மிகவும் நேசிக்கவும் செய்தார்கள். முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் பெருமாள் சாமி உட்பட அனைத்து பாதுகாவலர்கள் அவர் நலம் பெற்று வந்து ஐந்தாண்டு ஆட்சியை நிறைவு செய்வார் என்று நம்பி இருந்தனர். 

ஆனால் பேரிடியாக மறைவு செய்தி அவர்களையும் தாக்கியது. முதல்வர் உடல் மருத்துவ மனையிலிருந்து கான்வாய் போலவே கிளம்பியது முதல்வர் உயிரோடு இருந்த போது அவர் வெளியே கிளம்புபோது பரபரப்பு தோன்றும் அதே  போன்று உயிரற்ற அவரது உடலை  உருக்கத்துடன் தங்கள் முதல்வர் வீடு  நோக்கி செல்லும் பாதுகாப்பு ஏற்பாட்டை செய்தனர். 

மறுநாள் முதல்வர் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போதும், அவரது இறுதி ஊர்வலத்திலும் , அவரது சமாதி அமைக்கப்படும் இடத்தில் அவர் சமாதியில் அடக்கம் செய்யப்படும் அனைத்து ஏற்பட்டையும் பெருமாள் சாமி ஏற்பாடு செய்தார். 

அவரது உடல் கடைசியாக சந்தனபெட்டியில் வைக்கப்பட்டு அனைவரும் அஞ்சலி செலுத்திய பிறகு சவப்பெட்டியை மூடும் முன்னர் எங்கிருந்தோ ஓடி வந்தார் பெருமாள் சாமி கனத்த இதயத்துடன் முதல்வரின் முகத்தை ஆழ்ந்து உற்று நோக்கினார். 

வழக்கமாக முதல்வர் புறப்படும் முன்னர் அவர் கண்ணசைவை நோக்குவார் பெருமாள் சாமி. ஆனால் கண் மூடி மீளா துயிலில் இருக்கும் முதல்வர் அவருக்கு எந்த உத்தரவும் இடாமல் இருக்க சந்தனப்பெட்டியை மூடும் முன்னர் தனது முதல்வருக்கு கனத்த இதயத்துடன் ஒரு அஞ்சலியை செலுத்தினார் பெருமாள் சாமி. 

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!