
இரும்பு மனுஷி, பிடிவாதக்காரர்,போர்க்குணம் மிக்கவர், சிங்கதலைவி என்றெல்லாம் ஜெயலலிதாவை புகழ்வார்கள்.
இந்த புகழ்ச்சிக்கு ஏற்றாற்போலவே செல்வி ஜெயலலிதாவும் விஜய் படத்தில் வரும் டயலாக் போல "ஒரு முறை முடிவெடுத்துட்டா என் பேச்சை நானே கேக்கமாட்டேன்" என்ற அளவிற்கு எடுத்த முடிவில் உறுதியாக இருப்பார்.
அன்பு செலுத்துவதிலும் சரி எதிரிதன்மையை மெயின்டைன் செய்வதிலும் சரி ஜெ.வுக்கு நிகர் ஜெ.தான்.
அன்பு செய்வதாக இருந்தால் அள்ளி கொடுப்பதில் ஜெயலலிதாவை மிஞ்ச முடியாது என்பதில் அவரால் பதவி சுகம் அனுபவித்து இன்று பெரிய மனிதர்களாக உள்ள பலரே சாட்சி.
அதே போல் ஒரு எதிரியை இந்த அளவிற்கு எதிரிதன்மையுடனே மெயின்டைன் பண்ண முடியுமா? என்பதற்கு நிகழ்கால சாட்சிகள் தான் ஜெயலலிதா - கருணாநிதி.
எம்ஜிஆரா? - கருணாநிதியா? என்ற அரசியல் போட்டியில் ஆரம்பித்து பின்னர் கருணாநிதி - ஜெயலலிதா இடையே போட்டி ஏற்பட்டு அது பின்னர் தனிப்பட்ட பகையாகவாகவும் மாறிப்போனது.
அரசியல் போட்டிகளை தவிர்த்து தனிப்பட்ட முறையிலும் இருவரும் பரஸ்பரம் சாடிகொள்வது தமிழக மக்கள் அனைவரும் அறிந்ததே.
எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு ஜெயலலிதா - ஜானகி இடையே நடந்த உட்கட்சி மோதலை தொடர்ந்து திமுக ஆட்சியை பிடித்தது.
அப்போது சேவல் சின்னத்தில் தனித்து போட்டியிட்ட ஜெயலலிதா 26 எம்எல்ஏக்களை பெற்றிருந்தார்.
சட்டபேரவையின் ஒரு நிகழ்வின் போது திமுக தலைவர் கருணாநிதியின் முன்னிலையில் அப்போதைய அமைச்சர் துரைமுருகன் ஜெ.வின் சேலையை துகிலுரித்தார்.
அன்று மனதில் ஏற்பட்ட வடு மாறாத ஜெயலலிதா கருணாநிதியை எதிரியாக பிரகடனப்படுத்தினார்.
அன்றிலிருந்து கடைசி மூச்சு வரை கருணாநிதியுடனோ அல்லது திமுகவினருடனோ ஜெயலலிதா எந்தவித சமரசமும் செய்து கொண்டதில்லை.
வழக்கு வம்பு தும்பு என எந்த பிரச்சனை வந்தாலும் அல்லது தொல்லைகள் கொடுத்தாலும் அடிபணிய மாட்டேன் நேருக்கு நேர் சந்திப்பேன் என்ற ரீதியிலேயே செயல்பட்டார். அதில் வெற்றியும் பெற்றார்.
அதன் சாட்சியாகத்தான் 2011 சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி 2014 நாடாளுமன்ற தேர்தலில் 37 இடங்களில் வெற்றி.
உள்ளாட்சி தேர்தலில் 12/12 என்ற அளவில் அனைத்து மாநகராட்சிகளிலும் வெற்றி, கூட்டுறவு சங்க தேர்தலில் கொத்தாக அள்ளி குவித்தது.
அதையும் தாண்டி 2016 சட்டமன்ற தேர்தலில் பெரிய அளவில் பிரசாரத்தில் ஈடுபடா விட்டாலும் இமாலய வெற்றியை குவித்தார் ஜெயலலிதா.
தொடர் வெற்றிகளை குவித்து எதிரிகளை மண்ணை கவ்வ வைத்தாலும் கருணாநிதியிடம் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளவில்லை ஜெ.
1989ல் ஏற்பட்ட வைராக்கியத்தை எக்காரணத்தை கொண்டும் விட்டு கொடுக்காமல் இருந்து வந்தார் ஜெயலலிதா.
கருணாநிதி சிறு அறிக்கை கொடுத்தாலும் அதற்கு உடனடியாக பதிலைத் கொடுப்பதோடு அறிக்கையில் எதாவது ஒரு இடத்தில தனிப்பட்ட முறையில் தாக்கு தாக்கு என தாக்கி விடுவார்.
குறிப்பாக இந்தியாவில் மட்டுமல்ல உலக அளவில் கூட என சொல்லலாம் .இது போன்ற இரு எதிரெதிர் கட்சி தலைவர்கள் இந்த அளவிற்கு எதிரியாகவே மாறி போய்விட்டார்கள் என்றால் அதற்கு காரணம் ஜெயலலிதாவின் அந்த வைராக்கிய குணம் தான்.