"தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல கர்நாடகா உதவும்" - முதல்வர் ஓபிஎஸ்-க்கு சித்தராமையா வாழ்த்து….

Asianet News Tamil  
Published : Dec 07, 2016, 04:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:37 AM IST
"தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்ல கர்நாடகா உதவும்" -  முதல்வர் ஓபிஎஸ்-க்கு சித்தராமையா வாழ்த்து….

சுருக்கம்

முதலமைச்சர் ஜெயலலிதாவின் திடீர்  மறைவையடுத்து தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து புதிய முதல்வருக்கு அனைத்துத் தரப்பினரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, ஓ.பன்னீர் செல்வத்துக்கு இன்று எழுதியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், புதிய முதல்வராக பதவியேற்றுக்கொண்ட தாங்கள் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல வாழ்த்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தமிழகத்தின் வளர்ச்சிக்கு கர்நாடக அரசு உறுதுணையாக இருக்கும் என்றும், இரு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இணைந்து செயல்பட உறுதி அளிப்பதாகவும் சித்தராமையா எழுதியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்,

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!