ஜெயலலிதா மர்ம மரணம்... சசிகலாவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்..!

Published : Jun 19, 2021, 06:54 PM IST
ஜெயலலிதா மர்ம மரணம்... சசிகலாவுக்கு ஷாக் கொடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர்..!

சுருக்கம்

ஜெயலலிதா மரணத்தில் ஏதோ ஒன்று நடந்துள்ளது; அது பற்றி தெரியாததால் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜாரகவில்லை. சசிகலா கட்சியின் உறுப்பினரே கிடையாது.

சசிகலா ஒரு தாய் அல்ல. பேய் என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கடுமையாக விமர்சித்துள்ளார். 

திண்டுக்கல் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை அசந்தித்த அவர், ‘’ அதிமுகவை குறுக்கு வழியில் கைப்பற்றிட வேண்டும் என்ற நோக்கத்தில் சசிகலா நாடகமாடி வருகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது சசிகலாவுக்கு மட்டுமே தெரியும். மனசாட்சி என்ற ஒன்று இருந்தால் அதை சசிகலா வெளியில் சொல்வார்.

 

ஆனால் அவருக்கு மனசாட்சியும் கிடையாது, மண்ணாங்கட்டியும் கிடையாது. ஜெயலலிதா மரணத்தில் ஏதோ ஒன்று நடந்துள்ளது; அது பற்றி தெரியாததால் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆஜாரகவில்லை. சசிகலா கட்சியின் உறுப்பினரே கிடையாது. அவர் செயல்பாடு வேடிக்கையாக உள்ளது. அதிமுகவை பொறுத்தவரை இரட்டை குழல் துப்பாக்கி போல் இ.பி.எஸ், ஒ.பி.எஸ் உள்ளனர். கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்திச் செல்கின்றனர்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்வி கெளரவமான தோல்வி. இன்னும் சொல்லப்போனால் வெற்றிகரமான தோல்வி தான். ஆனால் அருமையான தலைமையில் அதிமுக சென்று கொண்டிருக்கிறது. அதிமுகவினர் யாரும் திண்டுக்கல் மாவட்டத்தில் சசிகலாவிடம் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. சில பத்திரிக்கைகளும் ஊடகங்களும் சில மாயையை ஏற்படுத்தி வருகின்றன. இந்த மாயயை உடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது’’என கடுமையாக விமர்சித்துள்ளார். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!