
எந்த சோதனைகள் வந்தாலும் அதனைக் கண்டு அஞ்சாதவர் ஜெயலலிதா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
திருவாரூரில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
எந்த சோதனைகள் வந்தாலும் அதனைக் கண்டு அஞ்சாதவர் ஜெயலலிதா. வலங்கைமான், அரித்துவாரமங்கலம் காவல் சரகங்கள் தஞ்சாவூரில் இருந்து இருந்து திருவாரூருடன் சேர்க்கப்படும். மன்னார்குடி அருகே புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும்.
குடவாசல் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும். இந்த ஆண்டு 11 கலை மற்றும் அறிவியல் அரசு கல்லூரிகளை தமிழக அரசு திறந்துள்ளது.
திருவாரூர் - மன்னார்குடி அருகே புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். சோழா சூடாமணி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்படும்
திருவாரூர் மாவட்டத்தில் புதிய தடுப்பணைகள் கட்டுவது குறித்து பரிசீலிக்கப்படும். 1,019 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் நடைபெற்றுள்ளன. குடிமராமத்து திட்டம் மேலும் 300 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்படும்.
என்று கூறினார்.