
சட்டமன்றத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பட திறப்பு விழாவுக்கு பிறகு, சபாநாயகர் தனபாலை சந்தித்து, காங். எம்.எல்.ஏ. விஜயதாரணி வாழ்த்து தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் திறப்பதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. குற்றவாளியின் உருவப்படத்தை, சட்டப்பேரவைக்குள் திறப்பது சட்டவிரோதம் என்றும், இந்த நிகழ்ச்சியில் திமுக பங்கேற்காது என்றும் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று கூறியிருந்தார்.
இதேபோல் காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசரும், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் முதன் முறையாக ஒரு பெண் படத்தை ஜெயலலிதா படம் திறப்புக்கு தமிழக காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், எம்.எல்.ஏ. விஜயதாரணி, வரவேற்பு தெரிவித்துள்ளது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் புகைப்படம் திறந்து வைக்கப்பட்டது. ஜெ. பட திறப்பு விழாவை புறக்கணிப்பது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் உத்தரவு போட்டிருந்தார். இதனால், விழாவுக்கு ஜெ. படம் விழாவுக்கு, விஜயதாரணி கலந்து கொள்ளவில்லை.
சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறப்பு விழா முடிந்த பிறகு, சபாநாயகர் தனபாலை, எம்.எல்.ஏ. விஜயதாரணி சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். சபாநாயகருக்கு நேரில் சென்று வாழ்த்து கூறிய எம்.எல்.ஏ. விஜயதாரணி மீது கட்சி தலைமை அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது.