ஜெ. இட்லி சாப்பிட்டதாக சொல்ல சொன்னது யார்? விளக்கம் கேட்கும் ஸ்டாலின் !

Asianet News Tamil  
Published : Sep 29, 2017, 01:56 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
ஜெ. இட்லி சாப்பிட்டதாக சொல்ல சொன்னது யார்? விளக்கம் கேட்கும் ஸ்டாலின் !

சுருக்கம்

Jayalalitha idley ate

அப்போலோ மருத்துவமனையில் மறைந்த ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துமனையில் சிகிச்சை  பெற்றுவந்தபோது, இட்லி சாப்பிட்டதாகவும், எழுந்து நடந்ததாகவும் அமைச்சர்கள் கூறினர். இது குறித்து மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். 

ஜெயலலிதா சிகிச்சையின்போது, இட்லி சாப்பிட்டார், எழுந்து நடந்தார் என்று கூறச் சொன்னது யார்? என்று அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மருத்துவமனையில் ஜெயலலிதா, அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்தினார் என்று தினம் ஒரு தகவல் பரப்பப்பட்டது ஏன்? என்றும் அதில் கேட்டுள்ளார்.

மருத்துவமனையில் ஜெயலலிதா நலமடைந்து அதிகாரிகளுடன் ஆலோசித்தார் என்றால் புகைப்படத்தை வெளியிடலாமே என்று கருணாநிதி ஏற்கனவே கூறியிருந்தார்.

அப்போது கருணாநிதியை அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சித்தவர்கள் இன்று புகைப்படம் மட்டுமின்றி வீடியோவும் உள்ளது என்கின்றனர் என்றும் அதில் கூறியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி கூறியதை கேட்டிருந்தால் அப்போதே உண்மைகள் வெளிப்பட்டிருக்கும் என்றும் ஸ்டாலின் அதில் தெரிவித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!
திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!