ராசு, கருப்பு, தம்பி: அகிலமே அ.தி.மு.க.வை ரசிக்க வைக்கும் அறிவு ஜீவிகள்...

Asianet News Tamil  
Published : Sep 29, 2017, 01:00 PM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
ராசு, கருப்பு, தம்பி: அகிலமே அ.தி.மு.க.வை ரசிக்க வைக்கும் அறிவு ஜீவிகள்...

சுருக்கம்

intelligent VIP Ind ADMK Party

ஒரு வார்த்தை சொன்னாலும் திருவார்த்தையா சொல்லி அதை இந்த அகிலத்தையே ரசிக்க வைக்கி திறமையெல்லாம் நம்ம அ.தி.மு.க. வி.வி.ஐ.பி.க்களுக்கு மட்டுமே வரும். இம்புட்டு நாளா அமைச்சர்களுக்குதான் அறிவு பொங்கி வழிஞ்சுதுன்னா இப்போ அந்த கட்சியில உள்ள மற்ற முக்கியஸதர்களுக்கும் ப்ரெயினு பப்பரக்கா பப்பாளிக்கான்னு வேலை செய்ய துவங்கியிருக்குது. 

போன சம்மருல மதுரைப்பக்கம் வேகாத வெயிலு மண்டையை பொளந்துட்டு இருந்துச்சு. என்ன நினைச்சாரோ தெரியல நம்ம மின்சிஷ்டர் செல்லூர் ராசு சட்டுப்புட்டுன்னு நாலு கவர்மெண்டு கார்களை கொண்டார சொல்லி, கலெக்டர் உட்பட பத்து பதினஞ்சு பேரை தூக்கி உள்ளே போட்டுகிட்டு பறந்தவரு ஆன் தி வேயில ஒரு ஸ்டேஷனரியில நிப்பாட்டி ஏழெட்டு தெர்மகோல் ஷீட்டுகளை வாங்கி உள்ளே வெச்சுக்கிட்டார். அப்படியே வைகை அணையை அணைச்ச மேனிக்கு காரை நிப்பாட்டுனவரு தண்ணீருல இறங்கி தெர்மகோலை மிதக்கவுட்டாரு. ‘ஏனுங்க தலைவரே இந்த வேலை?’ன்னு கேட்டதுக்கு ‘நீர் ஆவியாகாமல் தடுக்கத்தாம்னே இந்த வேலை’ன்னு சொல்லி அம்புட்டு பயலுவலையும் தெறிக்க வெச்ச கொடுமை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு சரித்திரத்தில் நிற்கும். 

அடுத்து கொங்கு மண்டலத்துல மழை இந்த வாட்டி அடிச்சு பெய்ஞ்சுட்டிருக்குதுங்ணா. நொய்யல் ஆத்துல வெள்ளம் வந்து, அது கூடவே நுரைக்க நுரைக்க நுரையும் வந்துச்சு. திருப்பூர் சாயப்பட்டறை ஆளுங்க நைஸா வேலையை காட்டி, சாயத்தை தண்ணீர்ல கலந்துட்டாங்கன்னு ஊரே கொதிச்சுது. இதப்பத்தி மாசுகட்டுப்பாட்டு வாரியத்துறை அமைச்சர் கருப்பணன்கிட்ட கேட்டப்ப, ‘அது வேற ஒண்ணுமில்லிங்கோ. கோயமுத்தூர் மக்கள் பயன்படுத்துற சோப்பு நுரைதானுங்கோ.’ன்னு சொன்னாரே பார்க்கலாம். கருப்பு கொடுத்த இந்த இஸ்டேட்மெண்ட்ல அப்படியே வழுக்கி விழுந்துச்சுங்கோ இந்த ஆட்சியோட அறிவும், தன்மானமும். செம்ம்ம்ம அடி! இன்னும் எழுந்திருக்க முடியலை. 

அட அமைச்ச்ருங்கதான் அறியாப்புள்ளைங்களா இப்படி பேசிட்டு திரியுறாங்கன்னு ஆசுவாசப்பட்டுக்கிட்டோம். ஆனா இவங்களை தூக்கி சாப்பிட்டிருக்காரு மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை. எம்.ஜி.ஆ. நூற்றாண்டு விழா நிகழ்வுகளுக்கு பள்ளி மாணவர்களை அழைத்து செல்வதற்கான தடையை உறுதிப்படுத்தி தமிழக அரசின் தலையில் நறுக்கென கொட்டியிருக்கிறது நீதிமன்றம். 

இந்நிலையில், பசங்களை ஏன் அழைச்சுட்டு போறீங்க?ன்னு கேட்டதுக்கு ‘எப்படி படிக்கணும் அப்படின்னு கத்துக் கொடுக்குறதுக்காகத்தான் மாணவர்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு அழைச்சுட்டு போனோம்.’ என்று சொல்ல சொக்கி நிற்கிறது தமிழகம். 

ஜெயலலிதா இல்லையே!ன்னு தினம் தினம் வருந்த வைக்கிறாங்களே நாராயணா....
 

PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!