
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மறைந்தார். அப்போது அவர் அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்து, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
பின்னர் அவரது உடலை அப்போலோ மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டன் வரை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அன்று அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை ஓட்டியவர்சென்னை கீழ்பாக்கத்தை சேர்ந்த பி.ஆர்.எம்.எம் சாந்தகுமார்.
58 வயது ஆன, சாந்தகுமார் "ஹோமேஜ்" என்ற இறுதி யாத்திரை உபகரணங்கள் வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். பொதுவாகவே இவர் பிரபலமான தலைவர்கள் மறையும் போது தன்னுடைய ஆம்புலன்சில் அவரே, ஊட்டி வருகிறார்.அந்த வகையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதியின் உடலை, தங்க முலாம் பூசிய குளிர்சாதன கண்ணாடி பெட்டியில் வைத்து, ஆம்புலன்ஸ் வாகனத்தை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இருந்து, கோபாலபுரத்திற்கும், அதன்பின் சிஐடி காலனி இல்லத்திற்கும், பின்னர் அங்கிருந்து ராஜாஜி ஹாலிற்கும் ஓட்டி சென்றார் சாந்த குமார்
புதியதாக வாங்கப்பட்ட வெள்ளை நிறத்திலான பிளையிங் ஸ்குவேர்டு வாகனத்தில் தான் கருணாநிதியின் உடல் எடுத்து செல்லப்பட்டது.
தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி மட்டுமின்றி இதற்கு முன்னதாக, நடிகர் சிவாஜி கணேசன், பத்திரிக்கையாளர் சோ உள்ளிட்டவர்களுக்கும் இவர் தான் இறுதி பயண வாகனத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.