
ஆர்.கே.நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றியை எதிர்த்து சுயேட்டை வேட்பாளர் பிரவீனா தொடர்ந்த வழக்கு விசாரணை நவம்பர் 29 தேதி தள்ளிவைப்பு.
மீண்டும் புதிதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி எம்.துரைச்சாமி உத்தரவு.
சட்டமன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதா வெற்றிபெற்றதாக அறிவித்ததை செல்லாது, அதை ரத்து செய்ய கோரி சுயேட்சை வேட்பாளர் பிரவீனா எனபவர் தொடர்ந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆர்.கே.நகரில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் பிரவீணா தாக்கல் செய்த மனுவில், தேர்தலின் போது வாக்கு சேகரிக்க சரியான அல்லது சமமான வாய்ப்பு அளிக்கவில்லை, அனுமதிக்கப்பட்ட வாகனங்கள் பிரச்சாரம் செய்ய சுயேட்சை வேட்பாளர்களுக்கு உரிய அனுமதியை தேர்தல் அதிகாரிகள் அளிக்கவில்லை என்றும், அதிகாரிகள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சாதகமாக செயல்பட்டனர் எனவும் குற்றம் சாட்டினார். எனவே ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட நோட்டீஸ் இன்னும் ஆணையத்திற்கு சென்றடையவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க புதிய நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணை நவம்பர் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.