புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவரையே அபேஸ் செய்த பெண் போலீஸ்....!!!

Asianet News Tamil  
Published : Nov 01, 2016, 11:31 PM ISTUpdated : Sep 19, 2018, 12:57 AM IST
புகார் கொடுக்க வந்த பெண்ணின் கணவரையே அபேஸ் செய்த பெண் போலீஸ்....!!!

சுருக்கம்

குடும்ப பிரச்சனைக்கு தீர்வு காண கணவர் மீது போலீசில் இளம்பெண் புகார் செய்தார். ஆனால், விசாரணை நடத்திய பெண் போலீஸ், புகார்தாரரின் கணவரை அபேஸ் செய்து எஸ்கேப் ஆகிவிட்டார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தெற்குபரணம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வகுமார் (40). இவரது மனைவி லதா (36), இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செல்வகுமார், சிங்கப்பூரில் வேலைக்கு சேர்ந்தார். அதன்பின் அடிக்கடி சொந்த ஊர் வந்து மனைவி, பிள்ளைகள் மற்றும் உறவினர்களை பார்த்துவிட்டு செல்வார். மாதந்தோறும் குடும்ப செலவுக்கு பணத்தை அனுப்பி வைத்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் செல்வகுமார், மனைவிக்கு போன் செய்தார். அப்போது, பேசும்போது கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் செல்வகுமார், மனைவியுடன் பேசுவதையும், மாதந்தோறும் பணம் அனுப்புவதையும் நிறுத்திவிட்டார்.

இதனால் குடும்பம் நடத்த முடியாமல் லதா கடும் சிரமம் அடைந்தார். இதுபற்றி உறவினர்களிடமும், லதா தெரிவித்தார். அவர்கள், செல்வகுமாருக்கு புத்திமதி எடுத்து சொல்லியும் அவர், பணம் அனுப்பவில்லை.

இதனை தொடர்ந்து லதா, சில மாதங்களுக்கு முன்பு இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகார் மனுவை விசாரித்த பெண் போலீஸ் ராதிகாவிடம் (33), புகார் செய்தார். வெளிநாட்டில் இருக்கும் தனது கணவர் குடும்பம் நடத்துவதற்கு பணம் அனுப்பாமல் இருப்பதாகவும், நீங்கள் பேசி பணம் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கூறினார். இதையடுத்து ராதிகாவிடம், செல்வகுமாரின் செல்போன் எண்ணை கொடுத்தார்.

அதற்கு ராதிகா, செல்வகுமாரிடம் பேசி பணம் அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் என உறுதியளித்தார். அதனை நம்பிய லதா, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் புகார் செய்து, ராதிகா எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்கள் மாதங்களாக ஆனது.

இதற்கிடையில் செல்வகுமாரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ராதிகா, லதாவுக்கு பணம் அனுப்புமாறு கூறினார். இதுதொடர்பாக அவர் செல்வகுமாரை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே கள்ளக்காதலாக மாறியது.

இதையடுத்து செல்வகுமாரும், ராதிகாவும் அடிக்கடி தங்களது புகைப்படங்களை ‘வாட்ஸ் அப்’ மூலம் பகிர்ந்து கொண்டனர். திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்தனர். இந்த தகவலை செல்வகுமார் தனது நண்பர்களுக்கு தெரிவித்தார்.

இதுபற்றி அவரது நண்பர் ஒருவர், லதாவிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த லதா, பெண் போலீஸ் ராதிகாவை சந்தித்து இதுபற்றி கேட்டார். ஆனால் அவர் எங்களுக்குள் அப்படி ஒன்றும் இல்லை என்று மறுத்தார்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி சிங்கப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு வந்த செல்வகுமார், மனைவி லதா மற்றும் குடும்பத்தினரிடம் சரியாக பேசவில்லை. 28ம் தேதி செல்வகுமாரும், பெண் போலீஸ் ராதிகாவும் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை கோவிலில் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர்.

இதையறிந்த லதா, ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின்படி போலீசார், செல்வகுமாரை கைது செய்து விசாரிக்கின்றனர். தலைமறைவான ராதிகாவை 2 தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர்.

ராதிகாவுக்கு ஏற்கனவே மணிமுருகன் என்பவரு டன் திருமணமாகியுள்ளது. கருத்துவேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து ராதிகா தனியாக வசித்து வந்தார். மற்றொரு பெண்ணின் கணவரை அபகரித்து 2வது திருமணம் செய்துகொண்ட பெண் போலீஸ் ராதிகா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

நள்ளிரவில் படுக்கையறைக்குள் புகுந்த அமெரிக்க ராணுவம்... பதறிய மதுரோவின் மனைவி..! பரபர சம்பவம்
பிரிந்து சென்றவர்கள் இணைந்தால் தான் அதிமுக வெற்றி பெறும் - அடித்து கூறும் ஓபிஎஸ்