நீ எல்லாம் ஓபிஎஸ் பத்தி பேச தகுதியே இல்லை! அதிமுகவை அழிக்க நினைக்கும் ஜெயக்குமார்.. மருது அழகுராஜ் பகீர்.!

Published : Dec 29, 2022, 06:46 AM ISTUpdated : Dec 29, 2022, 06:50 AM IST
நீ எல்லாம் ஓபிஎஸ் பத்தி பேச தகுதியே இல்லை! அதிமுகவை அழிக்க நினைக்கும் ஜெயக்குமார்.. மருது அழகுராஜ் பகீர்.!

சுருக்கம்

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜெயக்குமார் ஓபிஎஸ்-ஐ பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. அதிமுகவை அழிக்க நினைக்கிறார் ஜெயக்குமார். ஒற்றுமையாக இருந்த அதிமுகவை துண்டாக்கியவர் ஜெயக்குமார் என மருது அழகுராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். 

ஓ.பன்னீர்செல்வம் அரசியல் போலி என்றால், அது ஜெயலலிதாவையும் சேர்த்து சொல்வதுபோல் உள்ளது என ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் ஆவேசமாக கூறியுள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருது அழகுராஜ்;- ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓபிஎஸ். அதிமுக பிளவால் திமுக தேர்தலில் வெற்றி பெரும் என்பது தான் வரலாறு சொல்லும் பாடம். அதிமுக தலைமை கழகம் எடப்பாடி பழனிசாமியால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை கழகம் சட்ட நடவடிக்கைகள் மூலம் மீட்கப்படும் என்றார். 

இதையும் படிங்க;- திமுகவோடு எடப்பாடி பழனிச்சாமி ஒப்பந்தம்... புகழேந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!!

ஓ.பன்னீர்செல்வம்  அரசியல் போலி என்றால், அது ஜெயலலிதாவையும் சேர்த்து சொல்வதுபோல் உள்ளது. மக்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத். மக்களால் நிராகரிக்கப்பட்ட ஜெயக்குமார் ஓபிஎஸ்-ஐ பற்றி பேச எந்த தகுதியும் இல்லை. அதிமுகவை அழிக்க நினைக்கிறார் ஜெயக்குமார். ஒற்றுமையாக இருந்த அதிமுகவை துண்டாக்கியவர் ஜெயக்குமார் என மருது அழகுராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். 

மேலும், மனசாட்சி உள்ள தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் ஒரு மனமாற்றம் ஏற்பட்டுள்ளது. கடைக்கோடி தொண்டர்களும் ஓபிஎஸ் நிலைபாடுதான் நியாயமானது என ஏற்றுக்கொள்ள தொடங்கியுள்ளனர். இதனால் பலரும் எடப்பாடியை விட்டு விலகுவதற்கான சூழல் உருவாகி வருகிறது. இதற்காகவே அவசரக் கூட்டத்தை கூட்டி எடப்பாடி பழனிசாமி பட்டுவாடா செய்தார். அப்போது, கொடுக்கப்பட்ட பணத்தில் தான் ஒரு லட்சம் ரூபாய் திருடப்பட்டதாக மருது அழகுராஜ்  அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். 

இதையும் படிங்க;-  ஆள் பிடிக்கும் வேலையில் இபிஎஸ்.. அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை.. டிடிவி.தினகரன் திட்டவட்டம்..!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!