திமுகவோடு எடப்பாடி பழனிச்சாமி ஒப்பந்தம்... புகழேந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!!

By Narendran SFirst Published Dec 29, 2022, 12:31 AM IST
Highlights

எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசோடு ஒப்பந்தம் செய்துகொண்டு எந்த வழக்கிலும் கைது ஆகாமல் இருப்பதாக அதிமுக கொள்கைபரப்பு செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசோடு ஒப்பந்தம் செய்துகொண்டு எந்த வழக்கிலும் கைது ஆகாமல் இருப்பதாக அதிமுக கொள்கைபரப்பு செயலாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒபிஎஸ் 21 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் போட்டதும் போட்டியாக இபிஎஸ் 27 ஆம் தேதி ஒரு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். எதற்காக அந்த கூட்டத்தை நடத்தினார் என்று அவருக்கே தெரியவில்லை. அதிமுகவை காப்பாற்றுகின்ற இடத்தில் ஒபிஎஸ் இருக்கிறார். அதிமுகவை உடைத்து இபிஎஸ் என்ன லாபம் காணுகிறார் என்று தெரியவில்லை. பழனிச்சாமி திமுக அரசோடு ஒப்பந்தம் செய்துகொண்டு எந்த வழக்கிலும் கைது ஆகாமல் இருக்கிறார் என்று நினைக்கிறேன். கொடநாடு கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் அவர்மீது நிலுவையில் உள்ளது. முன்னாள் அமைச்சர் காமராஜர் மீது கொடுக்கப்பட்ட பருப்பு கொள்முதல் ஊழல் குறித்த வழக்கு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரேஷன் கடைகளுக்கு சர்க்கரை வாங்கியதிலும் ஊழல் நடந்துள்ளது.

இதையும் படிங்க: அரசுப்பேருந்து மோதி உயிரிழந்த லட்சுமணன் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் வழங்க வேண்டும்... சீமான் வலியுறுத்தல்!!

இதுகுறித்து புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுப்பேன் என்று கூறி திமுக ஆட்சி அமைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்று திமுக தொண்டர்கள் அனைவரும் கேட்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு சுதந்திரமாக சுற்றிதிரிந்து கொண்டிருக்கிறார். தேர்தல் ஆணையம் தேர்தல் அட்டவணை வெளியிடும் போதுதான் சின்னத்தை யாருக்கு கொடுப்பது என்று முடிவு எடுப்பார்கள். அந்த சூழ்நிலை ஏற்படும்போது நேரம் இருக்காது. அதுவரை சின்னம் குறித்து எதுவும் நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள். எந்த புகார் வந்தாலும் வாங்கிவைத்து கொள்வார்கள். தேர்தல் ஆணையம் தானாக முன்வந்து எந்த நடவடிக்கையும் எடுக்காது. நீதிமன்ற உத்தரவுபடி தேர்தல் ஆணையம் செயல்படும். ஒ.பன்னீர்செல்வம் பொருளாளராக இருந்தபோது கட்சி நிதி பாதுகாக்கப்பட்டது.

இதையும் படிங்க: திமுக அரசு நெசவாளர்களை வஞ்சிக்க நினைக்கிறது... தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு!!

ஆனால் தற்போது அதிமுக கட்சி நிதி தவறாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதாவை ஏற்றுக்கொண்டு அரசியல் நடத்துபவர்கள் சேர்ந்து செயல்படலாம் என்று ஒபிஎஸ் கூறியுள்ளார். அதுபோல் இணைந்து செயல்பட்டால் நல்லதுதான். தேர்தல் வந்தால் அதிமுக கட்சி பிரச்னைகள் அனைத்தும் தீர்ந்துவிடும். ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பன்னீர்செல்வம் தொடர்ந்து முதல்வராக இருந்திருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் வந்திருக்காது. பன்னீர்செல்வம் என்ற தலைவர் இல்லை என்றால் அதிமுக சர்வாதிகாரியிடம் சென்றுவிடும். ஒபிஎஸ், இபிஎஸ் போட்டி போட்டுக்கொண்டு மாநாடுகள் நடத்த வேண்டியதில்லை. இபிஎஸ் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் யாராவது ஒருவரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள் பார்ப்போம். சசிகலா, டிடிவி, இபிஎஸ், ஒபிஎஸ் அனைவரும் ஒன்றிணைந்த பின்புதான் யார் தலைமை என்பதை முடிவு செய்வோம் அதுவரையில் நாங்கள் ஒபிஎஸ் தலைமையைத்தான் இருப்போம் என்று தெரிவித்தார். 

click me!