
காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கும் உரிமை மேலாண்மை ஆணையத்துக்கு மட்டுமே உண்டு என்றும் அய்யா கமலஹாசன், பெங்களூரு போயி குமாரசாமியை கட்டிப்பிடிச்சா மட்டும் காவிரி நீர் வந்துவிடாது என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முழு உரிமையும் தமிழக அரசுக்கு மட்டுமே உள்ளது என்றும், அரசு எடுத்த கொள்கை முடிவுகளின் அடிப்படையிலேயே ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாகவும் ஜெயகுமார் தெரவித்தார்.
இது தொடர்பாக ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றம் மட்டுமன்றி, சர்வதேச நீதிமன்றங்களுக்கு சென்றாலும் இனி தமிழகத்தில் மீண்டும் அந்த ஆலையை திறக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து நீட் தேர்வு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மாநில அரசின் எதிர்ப்புகளை மீறி நீட் தேர்வு அளிக்கப்பட்டு விட்டதாகவும், இருப்பினும் தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.
நடிகர் கமலஹாசன் நேற்று கர்நாடக முதல்வரை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்ட பின்னர் நீர் திறக்கும் முழு உரிமை அந்த ஆணையத்துக்கு மட்டுமே இருப்பதாகவும், மாநில அரசுகளால் அந்த முடிவுகளை எடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
கமலஹாசன் கர்நாடகா சென்று முதலமைச்சர் குமாரசாமியை சந்தித்து கட்டிப்பிடி வைத்தியம் செய்வதன் மூலம் காவிரியில் நீர் வந்துவிடாது எனவும் கிண்டலாக பதில் அளித்தார்.