AIADMK: கோட்டு.. ரிப்பீட்டு.. இன்ஸ்பெக்ஷன்.. ரிப்பீட்டு.. ஸ்டாலினை பங்கமாய் கலாய்த்த ஜெயக்குமார்..!

By vinoth kumarFirst Published Nov 30, 2021, 10:20 AM IST
Highlights

அதிமுகவினர் எழுச்சியுடன் விருப்ப மனுக்களை வாங்கிச் செல்வதாகவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியினை பெறும் என்றும் கூறினார். மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசின் கைப்பாவையாக இல்லாமல், சுதந்திரமாக செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசின் கைப்பாவையாக இல்லாமல், சுதந்திரமாக செயல்படவேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை ராயபுரம், திரு.வி.க. நகர் ஆகிய தொகுதிகளில் உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் வழங்கப்படும் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்;- அதிமுகவினர் எழுச்சியுடன் விருப்ப மனுக்களை வாங்கிச் செல்வதாகவும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றியினை பெறும் என்றும் கூறினார். மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசின் கைப்பாவையாக இல்லாமல், சுதந்திரமாக செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: எப்போதும் கூலாக இருக்கும் அமைச்சர் சேகர்பாபுவிடம் பயத்தை பார்க்கிறேன்.. சொன்னது நடக்கும்.. அண்ணாமலை சரவெடி.!

முதலமைச்சர் ஸ்டாலின் கோட் போடுவது, இன்ஸ்பெக்சன் போவது, டீ சாப்பிடுவது என்று சினிமா போல் ரிப்பீட்டேஷன் செய்கிறாரே தவிர இதனால் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எந்த பலனும் இல்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். 

இதையும் படிங்க: மூத்த நிர்வாகிக்கு மரியாதை தரலைன்னா அம்மா தந்த தண்டனை என்ன தெரியுமா? CV.சண்முகத்தை சொல்கிறாரா ஜெ. உதவியாளர்.!

இதையும் படிங்க: AIADMK: அடாவடித்தனம் செய்யும் அமைச்சர் செந்தில்பாலாஜி.. இதெல்லாம் ஒரு பொழப்பா என விளாசும் எடப்பாடியார்..!

மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க திமுக அரசு தவறி விட்டது. மழை வெள்ளத்தை அப்புறப்படுத்த எந்த ஒரு இடத்திலும் ராட்சத இயந்திரங்கள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை. மழை காலத்தில் திமுக விழிப்புணர்வு இல்லாமல் செயல்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் எப்படிச் செய்வது, மறுவாழ்வு மையத்தை எப்படி நடத்துவது என திமுக அரசுக்கு தெரியவில்லை. அது தொடர்பாக திமுகவினர் எங்களிடம் கேட்டு மக்களுக்கு அந்தப் பணிகளை செய்யட்டும். பேரிடர் மேலாண்மையை கையாள்வதில் திமுக அரசு தவறி விட்டதால், தமிழ்நாட்டை மழை, வெள்ளத்தில் இருந்து கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்று கூறினார்.

click me!