
அதிமுகவின் பொது செயலாளர் பதவி குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், துணை பொது செயலாளர் பதவி கேள்விக்குறியாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
இந்த நிலையில், டிடிவி தினகரன் அறிவித்த பட்டியலும் கேள்விக்குறியே என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க நிதியமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொள்கிறார்.
டெல்லி புறப்படும் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கட்சியின் பொது செயலாளர் தொடர்பான வழக்கு, நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் நிலுவையில் இருப்பதாக கூறினார்.
துணை பொது செயலாளர் பதவியே கேள்விக்குறியாக உள்ளபோது, அவர் அறிவித்த புதிய நிர்வாகிகள் பட்டியலும் கேள்விக்குறியே என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.