
தி.மு.க., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசை கலைக்க முயற்சி செய்யும் நோக்கில் அரசுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவும் அவரது உள்நோக்கம் பகல் கனவாகவே முடியும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரவித்தார்..
ஜிஎஸ்டியில் மேலும் பல பொருட்களுக்கான வரி விதிப்பு இன்று மாற்றம் செய்யப்படவுள்ளது. இது தொடர்பாக இன்று நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சிலின் 17வது கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்ககப்படுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்த கொள்வதற்காக தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அப்போது விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
தமிழக அரசு ஜனநாயக முறைப்படி மிக நன்றாக செயல்பட்டு வருவதாக ஜெயக்குமார் தெரிவித்தார். ஆனால் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உள் நோக்கத்துடன் அதிமுக அரசு மீது தொடர்ந்து களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.
சிறு பிரச்சனைகளை எல்லாம் பெரிதாக்கி அதைப் பயன்படுத்தி முதலமைச்சராக ஸ்டாலின் துடிக்கிறார் என தெரிவித்த ஜெயகுமார் அவரது உள்நோக்கம் பகல் கனவாகவே முடியும் என்று கூறினார்.