ஆடு கசாப்பு கடைக்காரனை நம்பினால் என்ன நடக்குமோ, அதுதான் ஓபிஎஸ்ஐ நம்பியவர்களின் நிலை - ஜெயக்குமார் அதிரடி

By Ajmal KhanFirst Published Feb 7, 2023, 1:21 PM IST
Highlights

அதிமுக வேட்பாளர் தென்னரசு என்ற பெயரையே சொல்லவே வலிக்கிறது ஆனால் இரட்டை இலைக்கு வாக்கு கேட்போம் என்பது முரண்பாடாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார், மேலும்  அரசியலில் எது நடந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு நடக்கவே நடக்காது என உறுதிபட கூறினார்.

தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பான விதிமீறல்கள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், இன்பதுரை ஆகியோர் வீடியோ ஆதாரங்களுடன் நேரில் சந்தித்து புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  அரசு இயந்திரத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தாமல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் குறுக்கு வழியில் வெற்றி பெற திமுக முயற்சி செய்து வருகிறது என குற்றம்சாட்டினார். பணத்தை வாரிவாரி செலவழித்து, ஒட்டுமொத்த அமைச்சர்களும் அங்கே முகாமிட்டு செயலாற்றி வந்தாலும் அதிமுக அங்கு வெற்றி பெறும் என கூறினார்.

ஈரோடு இடைத்தேர்தல்..! அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு பாஜக முழு ஆதரவு- அண்ணாமலை அறிவிப்பு

வெற்றிலை பாக்கோடு ஆயிரம் ருபாய்

வெற்றிலை, பாக்கு தேங்காய், சொம்பு அதில் ஒரு ஆயிரம் ரூபாய் வைத்து மக்களுக்கு திமுகவினர் வழங்குகிறார்கள். சொம்பு தூக்குபவர்கள் சொம்பு தான் தருவார்கள். தேர்தல் வந்தால்தான் மக்கள் கண்ணுக்கு தெரிவார்கள். இல்லையென்றால் தெரிய மாட்டார்கள் என விமர்சித்தார். சுவர் விளம்பரங்களிலும் அத்துமீறி ஈடுபட்டு வருகின்றனர். இதை எல்லாம் குறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக அது குறித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்ன தேர்தல் அதிகாரி உத்தரவாதம் கொடுத்து இருப்பதாக தெரிவித்தார்.

இபிஎஸ்-ஓபிஎஸ் சந்திப்பா.?

ஆடு கசாப்பு கடைக்காரனை நம்பினால் என்ன நிலையாகுமோ அதுதான் ஓபிஎஸ்ஐ நம்பியவர்களுக்கு நிகழ்ந்துள்ளதாக தெரிவித்தவர், குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் ஓபிஎஸ் பேசுவதாக விமர்சித்தார். தென்னரசு என்ற பெயரையே சொல்ல வலிக்கிறது. இரட்டை இலைக்கு வாக்கு கேட்பது என்பது முரண்பாடானது. அரசியலில் எது நடந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு நடக்கவே நடக்காது என உறுதிபட கூறினார்.

இதையும் படியுங்கள்

தீவிரமடையும் கொடநாடு கொலை வழக்கு..! கோவையில் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸ் ரகசிய விசாரணை

click me!