அண்ணாமலை கடை விரித்தார்.. ஆனால் போனியே ஆகவில்லை.. பாஜக போல் ஆள் பிடிக்கும் வேலையை அதிமுக செய்யாது- ஜெயக்குமார்

Published : Feb 27, 2024, 03:33 PM IST
அண்ணாமலை கடை விரித்தார்.. ஆனால் போனியே ஆகவில்லை.. பாஜக போல் ஆள் பிடிக்கும் வேலையை அதிமுக செய்யாது- ஜெயக்குமார்

சுருக்கம்

 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தான் முதலிடம் பிடிக்கும் எனவும், பா ஜ க விக்கு 3 முதல் 4 சதவீதம் வாக்கு மாத்திரமே கிடைக்கும் என ஜெயக்குமார் தெரிவித்தார்.   

ரா அமைப்பு விசாரணை நடத்தனும்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா தொழிற்சங்கத்தின் மின்சார பிரிவு சார்பாக சென்னை அண்ணா சாலையில் ஏழை எளிய மக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நலத்திட்ட உதவிகளை  வழங்கினார். இதன் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், போதைப் பொருள் கடத்திலில் தொடர்புடைய திமுக அயலாக அணியின் நிர்வாகி ஜாபர் சாதிக் குறித்து சர்வதேச விசாரணை அமைப்பான ரா விரிவான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்திய அவர், திமுக இதற்காக தான் அயலக அணியை உருவாக்கியதோ என சந்தேகம் எழுவதாக கூறினார்.

விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவித்த சபாநாயகர், திருக்கோவிலூர் தொகுதியை ஏன் காலி என அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பிய ஜெயகுமார், சபாநாயகர் அப்பாவுவை போல ஒருதலைப்பட்சமான சபாநாயகர் தான் சந்தித்ததில்லை என கூரினார். 

பாஜகவிற்கு 3% வாக்குகளே கிடைக்கும்

தமிழக கடலோரங்களில் இருக்கக்கூடிய பாரம்பரிய மீனவர்களை அடித்து விரட்டி விட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை கொண்டு வருவதற்கே நெய்தல் நிலம் மீட்சி என்ற திட்டத்தை அரசு கொண்டு வருவதாகவும் மீனவர்களை சீண்டினால் கிழக்கு கடற்கரை சாலை ஸ்தம்பிக்க வைக்கும் அளவுக்கு மிகப்பெரிய போராட்டம் நடக்கும் என எச்சரித்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா. ஜ க வுக்கு 18 சதவீத வாக்கு கிடைக்கும் என கருத்து கணிப்பு வெளியிட்ட தனியார் ஊடக நிறுவனத்தை கடுமையாக விமர்சித்த அவர், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தான் முதலிடம் பிடிக்கும் எனவும், பா ஜ க விக்கு 3 முதல் 4 சதவீதம் வாக்கு மாத்திரமே கிடைக்கும் என தெரிவித்தார்.

 அண்ணாமலை கடை போனியாகவில்லை

பாஜகவில் மாற்று கட்சியினரை சேர்க்க நேற்று அண்ணாமலை கடை விரித்தார், அதில் போனியே ஆகவில்லை.  எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையை ஏற்று மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் தங்களை இணைத்துக் வருவதாகவும், பா. ஜ க மாநில தலைவர் அண்ணாமலை போல ஆள் பிடிக்கும் வேலையை அதிமுக செய்யாது என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

யார் அந்த முக்கிய புள்ளி.? பாஜகவில் இணையாததற்கு காரணம் என்ன.? அண்ணாமலை கூறிய பரபரப்பு விளக்கம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கொடுத்த அசைன்மெண்ட்..! செங்கோட்டையனின் வருகைக்கு பின் அடியோடு மாறிய தவெக..!
திமுக கூட்டணிக்குள் விஜய் வைத்த வேட்டு..! இருதலைக் கொல்லியான காங்கிரஸ்..! மு.க.ஸ்டாலின் பகீர் முடிவு..!