திமுகவில் மாவட்ட செயலாளர்கள் அதிரடி மாற்றம்.! வெளியான முக்கிய அறிவிப்பு- காரணம் என்ன.?

By Ajmal Khan  |  First Published Feb 27, 2024, 2:26 PM IST

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரம் அடைந்து வரும் நிலையில், சென்னை வடக்கு மற்றும் பெரம்பலூர் மாவட்ட செயலாளர்கள் மாற்றம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 
 


மாவட்ட செயலாளர்கள் மாற்றம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுகவில் மாவட்ட செயலாளர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  இது தொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் பெரம்பலூர் மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வரும் குன்னம் ராஜேந்திரன் தனது உடல்நிலை குறைவு காரணமாக தான் வகித்துவரும் பொறுப்பிலிருந்து விடுவித்துக் கொண்டதால் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற வீ. ஜெகதீசன் அவர்களை பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

புதிய மாவட்ட செயலாளர்கள் யார்.?

ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுவதாவும் கூற்பட்டுள்ளது. மேலும் சென்னை வடக்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வரும் இளைய அருணா பொறுப்பில் இருந்து விடுவித்து அவருக்கு பதிலாக ஆர்.டி சேகர் சென்னை வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்

யார் அந்த முக்கிய புள்ளி.? பாஜகவில் இணையாததற்கு காரணம் என்ன.? அண்ணாமலை கூறிய பரபரப்பு விளக்கம்

click me!