மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லை என சொல்லக் கூடிய அளவுக்கு நிலைமை உள்ளது. திமுக கூட்டணி, மக்களின் நல் ஆதரவை பெற்று வரக்கூடிய தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெறும்.
பாஜகவை விட்டு அதிமுக தனியாக பிரிந்து வந்தாலும் அதிமுகவை பாஜக விடுவதாக இல்லை என திருமாவளவன் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீட்டை உறுதி செய்வதில் தீவிரமாக உள்ளன. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்த முறை 2 தனி தொகுதிகளையும் ஒரு பொதுத்தொகுதியையும் ஒதுக்குமாறு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், கடந்த முறை சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமாவளவன் இந்த முறை வேறு தொகுதிக்கு மாறுவதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை திருமாவளவன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இதையும் படிங்க: ராஜ்யசபா சீட் கேட்டு அடம்பிடிக்கும் தேமுதிக!நோ சொன்ன அதிமுக?கூட்டணியை உறுதி செய்ய முடியாமல் தவிக்கும் பிரேமலதா
அரியலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன்: மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்க்கட்சியே இல்லை என சொல்லக் கூடிய அளவுக்கு நிலைமை உள்ளது. திமுக கூட்டணி, மக்களின் நல் ஆதரவை பெற்று வரக்கூடிய தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெறும். திமுக கூட்டணியில் 10 கட்சிகளுக்கு மேலாக அங்கம் வகிக்கிறோம். அதில் 2 கட்சிகள் தொகுதி உடன்பாடு செய்து கொண்டு கையெழுத்திட்டுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியை பொறுத்தவரை முதல்கட்ட பேச்சுவார்த்தையில் பங்கெடுத்துள்ளோம். விருப்பங்களை வெளிப்படுத்தியுள்ளோம். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் நடைபெறும் என நம்புகிறோம்.
நான்கு தொகுதிகளை கேட்டுள்ளோம். அதில் ஒரு தொகுதி பொது தொகுதி. ஆனால் எட்டு கட்சிகள் கூட்டணியில் உள்ளதால் அவ்வளவு தொகுதிகளைப் பெற முடியாது என்ற நிதர்சனத்தையும் உணர்ந்துள்ளோம். சூழலுக்கு ஏற்ப முடிவு செய்வோம். சிதம்பரம் என்னுடைய சொந்த தொகுதி. இங்குதான் நான் நிற்பேன். அதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம். இம்முறை தென் மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதிக அளவில் போட்டியிட முடிவு செய்துள்ளோம். கர்நாடகாவில் மூன்று தொகுதிகளிலும் ஆந்திராவில் மூன்று தொகுதிகளிலும் கேரளாவில் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு கட்சியினர் முன்வந்துள்ளனர். தமிழகத்தில் திமுக கூட்டணியிலும், மற்ற மாநிலங்களில் இண்டியா கூட்டணியில் போட்டியிட முயற்சித்து வருகிறோம் என்றார்.
இதையும் படிங்க: AIADMK - PMK Alliance: அதிமுகவுடன் பாமக கூட்டணியா? உண்மையை போட்டுடைத்த அன்புமணி.!
மேலும் பேசிய திருமா பாஜகவை விட்டு அதிமுக தனியாக பிரிந்து வந்தாலும் அதிமுகவை பாஜக விடுவதாக இல்லை. அதிமுகவை 3ம் இடத்திற்கு தள்ளி அதனை பலவீனப்படுத்தும் முயற்சியில் பாஜக உள்ளது. இதனை ஏற்கனவே பலமுறை தெரிவித்துள்ளேன் என திருமா கூறியுள்ளார்.