பாஜக எம்எல்ஏக்கள் 2 பேர் இன்று மதியம் அதிமுகவில் இணைகிறார்கள்..? அம்மன் அர்ஜூனன் தகவலால் பரபரப்பு

By Ajmal Khan  |  First Published Feb 27, 2024, 12:30 PM IST

பாஜகவை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இன்று மதியம் அதிமுகவில் இணைய இருப்பதாக கோவை சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜூனன் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.


அதிமுக- பாஜக மோதல்

அதிமுக நிர்வாகிகள் மற்றும் மு்ன்னாள் எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து பாஜகவில் இணைவதும் அதற்கு போட்டியாக பாஜகவில் பல ஆண்டுகாள இருந்த நடிகை கவுதமி மற்றும் சிறுபான்மை அமைப்பை சேர்ந்த பாத்திமா அலி உள்ளிட்டோரை அதிமுகவிற்கு இழுத்தும் எடப்பாடி பழனிசாமி அதிரடி காட்டினார். இந்தநிலையில் அரசியல் முக்கிய புள்ளி ஒருவர் பாஜகவில் இணைய இருப்பதாக அண்ணாமலை நேற்று தெரிவித்து இருந்தார். அந்த முக்கிய புள்ளி யார் என்ற கேள்வி அணைவரின் மத்தியில் எழுந்த நிலையில், இன்று(நேற்று ) மாலை பாருங்கள் என கூறியிருந்தார். இதைனயடுத்து கோவையில் உள்ள நட்சத்திர விடுதியில் இதற்கான ஏற்பாடுகளையும் பாஜக செய்திருந்தது.

Tap to resize

Latest Videos

பாஜக - இணைப்பு விழா ரத்து

ஆனால் யாரும் பாஜகவில் இணைய வரவே இல்லை. கடைசியில் காத்திருந்த விட்டு பத்திரிக்கையாளர்கள் திரும்ப சென்றனர். பிரதமர் மோடி தமிழகம் வரும் நிலையில், இந்த இணைப்பு விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளாதகவும், விரைவில் இணைப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அப்போது அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜூனன் நட்சத்திட விடுதி அருகே தனது ஆதரவாளர்களுடன் நடந்து சென்றார். இதனால் அம்மன் அர்ஜூனன் பாஜகவில் இணைய வந்திருக்கலாம் என தகவல் வெளியாகியிருந்தது.

அதிமுகவில் இணையும் பாஜக எம்எல்ஏக்கள்

இதனையடுத்து இது தொடர்பாக விளக்கம் அளிக்க செய்தியாளர்களை சந்தித் அம்மன் அர்ஜூனன்,அவநாசி சாலை எல்லாருக்கும் பொதுவான சாலை தானே.. அங்கு எனது நண்பர் வீடு உள்ளது. வீட்டிற்கு வந்து விட்டு திரும்ப சென்றேன். அந்த நேரத்தில் ஓட்டலில் இருப்பார்கள் எனக்கு எப்படி தெரியும், அந்த நேரத்தில் சாலையில் செல்லக்கூடாதா.? என கேள்வி எழுப்பினார். எங்க மடியில் கனமில்லை அதனால் பயமில்லை. ஆனால் பாஜக பிள்ளை பிடிப்பவர்கள் போல அழைகிறார்கள். இன்றைய தினம் பாஜக எம்எல்ஏ இரண்டு பேர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் சந்தித்து அதிமுகவில் இணையவுள்ளனர். இதனை நான் சிரிப்புக்கு சொல்லவில்லை.இது உண்மையென கூறினார். நான் அதிமுகவில் ராஜாவாக இருக்கிறேன். நான் ஏன் பாஜகவில் இணையவேண்டும் என கேள்வி எழுப்பினார். 

இதையும் படியுங்கள்

பொன்முடி தொகுதி காலியானதாக அறிவிக்க தயக்கம் ஏன்.? தேர்தலை சந்திக்க பயமா.? ஸ்டாலினுக்கு சவால் விடும் பாஜக

click me!