பாஜகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை.. காங்கிரசுக்கு அதிமுக கூட்டணி கதவு திறந்து இருக்கிறது- ஜெயக்குமார் அதிரடி

By Ajmal Khan  |  First Published Dec 18, 2023, 7:14 AM IST

திமுகவை அனைத்து கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வரும் நிலையில், திமுகவுடனான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி தானாகவே கலைந்து விடும் - அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


மக்கள் பாதிப்பில்லாமல் வங்கியில் பணம்

பள்ளி மாணவ மாணவிகளின் கண்களை கட்டிகொண்டு படம் வரைதல், cube- ஐ பயன்படுத்தி அப்துல் கலாமின் உருவத்தை கொண்டு வருதல், யோகாசனம் செய்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. சென்னை பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார்.அப்போது பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு விருதுகளை வழங்கி பாராட்டினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2015ஆம் ஆண்டு வெள்ளம் பாதித்த போது மக்களுக்கு நிவாரணம் கொடுப்பதில் சிரமம் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் வங்கிகளில் அந்த தொகையை செலுத்தினோம்.

Tap to resize

Latest Videos

சொத்தை எழுதி கொடுப்பது போல் மக்களை சிரமப்படுத்துகிறார்கள்

ஆனால் தற்போது திமுக அரசு வழங்கும் 6000 ரூபாயை வாங்குவதற்குள் போதும் போதும் என்று ஆகிறது. ஒவ்வொரு பகுதிகளிலும் நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட பயனாளர்களின் பட்டியலை திமுக கட்சிக்காரர்கள் வைத்துக் கொள்கிறார்கள். நேரடியாக வீடுகளுக்கு சென்று கூட டோக்கன்களை விநியோகம் செய்யவில்லை.திமுககாரர்கள் வைத்துள்ள பெயர் பட்டியலை நியாய விலை கடைகளுக்கு முன்பு ஒட்டி விட்டால் சிரமம் ஏற்படாது. 6000 ரூபாய் வாங்குவதற்குள் ஏதோ சொத்தை எழுதி கொடுப்பது போல் மக்களை சிரமப்படுத்துகிறார்கள், திமுக. வங்கிகளில் கூட நிவாரண தொகையை செலுத்தி இருக்கலாம்.

முதலமைச்சர் செல்பி எடுத்தாலே இன்று ட்ரெண்ட்

மாடர்ன் தியேட்டர் விவகாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுக என்றாலே நில அபகரிப்புக்கு சொந்தக்காரர்கள். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நில அபகரிப்பு சட்டம் இவர்களுக்காகத்தான் கொண்டுவரப்பட்டது. அரசாங்கமே அபகரிப்பு செய்கிறது. வேலியே பயிரை மேய்ந்தது போல் உள்ளது. முதலமைச்சர் செல்பி எடுத்தாலே இன்று ட்ரெண்ட் ஆகி வருகிறது செல்பி என்றாலே இப்போது பயம் வருகிறது.  ஒவ்வொருவருக்கும் ஒரு மேனியா இருப்பது போல், ஸ்டாலினுக்கு சிலை மேனியா உள்ளது. எங்கு பார்த்தாலும் அப்பாவின் சிலை வைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது.மக்கள் ஏமாந்தால், தமிழ்நாட்டை கலைஞர் நாடு என்று மாற்றி விடுவார், ஸ்டாலின்.

அதிமுக கூட்டணியில் யார்.?

தேர்தல் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை.ஜெயிக்கப் போகும் கட்சி நாங்கள் எங்களுடன் யார் வந்தாலும் அங்கீகாரம் இருக்கும். காங்கிரஸ் கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா என்ற கேள்விக்கு கண்டிப்பாக எங்கள் கூட்டணிக்கு காங்கிரஸ் வரும் காங்கிரசுக்கு அதிமுக கூட்டணி கதவு திறந்து இருக்கிறது. நாங்கள் யாரையும் சென்று அழைக்க மாட்டோம். ஆனால், அது பாஜகவுக்கு பொருந்தாது அவர்களுக்கு அதிமுகவிற்குள் நுழைவதற்கான கதவு மூடிவிட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு கதவு திறந்துள்ளது

தேர்தல் நடவடிக்கைகள் பேச்சுவார்த்தைகள் அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்டன நாங்களும் தொடங்கி விட்டோம் உரிய நேரத்தில் வெளிப்படையாக தெரிவிப்போம். திமுக காங்கிரஸ் கூட்டணியை நாங்கள் கலைக்க வேண்டிய அவசியம் இல்லை. தற்பொழுது உள்ள திமுகவை அனைத்து கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வரும் நிலையில் தானாகவே நெல்லிக்கனி போல கூட்டணி கலைந்து விடும். சட்ட ஒழுங்கு சரியில்லை, மின்கட்டணம், பால் உள்ளிட்ட பொருள்கள் விலை உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் எப்படி திமுகவிற்கு ஓட்டு போடுவார்கள் என கேள்வி எழுப்பினார். 

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தல்.. தஞ்சை தொகுதியில் களமிறங்குகிறாரா டிடிவி.தினகரன்? அவரே சொன்ன தகவல்..!

click me!