முதலமைச்சர் தனது அப்பாவுக்கு சிலை வைக்க , பெயர் வைக்க ,கார் ரேஸ் நடத்த கருவூலத்தில் பணம் இருக்கிறது , ஆனால் தொழிலாளர்களுக்கு கொடுக்க பணம் இல்லையென ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்
தொழிலாளர்களுக்கு பணம் இல்லையா.?
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், எம்ஜிஆர் பிறந்தநாள் கூட்டத்தை மக்களுக்கு பயன் தரும் வகையில் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதிமுக அரசின் சாதனைகளை கூறும் வகையில் எம்ஜிஆர் பிறந்தநாள் கூட்டம் நடைபெறும். மேலும் விலைவாசி உயர்வு உட்பட தற்போதைய ஆட்சியின் அவலங்களை எடுத்து கூற உள்ளோம் ,
அரண்டவன் கண்ணுக்கு இருண்டமெல்லாம் போய் என்பது போல் உள்ளது , போக்குரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு அதிமுக காரணம் என சொல்கின்றனர். முதலமைச்சர் தனது அப்பாவுக்கு சிலை வைக்க , பெயர் வைக்க ,கார் ரேஸ் நடத்த கருவூலத்தில் பணம் இருக்கிறது , ஆனால் தொழிலாளர்களுக்கு கொடுக்க பணம் இல்லை. ஆசியாவின் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக உள்ளது , அவர்களது கருவூலத்தில் இருந்து பணத்தை எடுத்தால் தமிழகத்தின் அனைத்து பிரச்சனையையும் தீர்த்து விடலாம்.
போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேற்றி இருப்போம்
சுயநலம் கொண்ட அரசாக , தொழிலாளர் விரோதப் போக்குடன் இந்த அரசு உள்ளது. அரசு ஊதறித் தனமாக செலவு செய்ததால் தொழிலாளர்களுக்கு கொடுக்க பணம் இல்லை. எல்லா பேருந்தும் எலும்பும் , தோலுமாக உள்ளது , உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜெயலலிதா அரசு 2 அரை லட்சம் , எடப்பாடி ஆட்சியில் 3 லட்சம் கோடி முதலீடு திரட்டப்பட்டது. மேடையில் ரெக்கார்ட் டான்ஸ் ஆடி , யூடியூபரை உக்கார வைத்து அரசை பிரபலப்படுத்தும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்துவது எல்லாம் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடா? ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என விமர்சித்தார். எங்கள் ஆட்சி இருந்திருந்தால் அரசின் கருவூலத்திலிருந்து போக்குவரத்துத் கழகங்களுக்கு பணம் கொடுத்திருப்போம். 70 கோடி தான் கேட்கின்றார்கள் அவர்கள். யார் எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன என்று இருக்கிறார்கள். பிடிவாதப் போக்கை அரசு கைவிட வேண்டும்.
கருணாநிதி நூற்றாண்டு விழா
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் வடிவமைப்பையே மாற்றி விட்டார்கள் , எல்லா இடத்திலும் கருணாநிதி சிலையும் , கருணாநிதி பெயரும் வைக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முன்கூட்டியே சொல்லிவிட்டு திறந்திருக்க வேண்டும். கருணாநிதி நூற்றாண்டு விழாவில் 899 நபர்கள்தான் பங்கேற்றுள்ளனர். ஸ்டாலின் தனது தந்தையை கேவலப்படுத்தி விட்டார் , கருணாநதியை நல்லா வச்சு செஞ்ச தயாரிப்பாளர் , நடிகர் சங்கங்களுக்கு எனது வாழ்த்துகள்.
ரஜினி, கமலை நிராகரிப்பார்கள்
கருணாநிதியால் உயர்ந்தவர் எம்ஜிஆர் என்பதை தமிழகம் ஏற்காது , கருணாநதிக்கு எம்ஜிஆர் போட்ட பிச்சைதான் முதலமைச்சர் பதவி. ரஜினி , கமலுக்கான எதிர்பார்ப்பு என்ன என்று தெரியவில்லை , ஆனால் உண்மையை மறைத்து பேசுவதை ஏற்க மாட்டோம். அதிமுக தொண்டர்களால் அவர்கள் நிராகரிக்கப்படுவார்கள். இப்படியெல்லாம் ஸ்கிரிப்ட் கொடுத்து பேச சொல்வார்கள் என்பதால்தான் அங்கு செல்லாமல் நடிகர்கள் விஜய் , அஜித் தப்பித்துவிட்டனர் என ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்