ADMK MEETING : யாரை வேட்பாளாராக நிறுத்தினால் வெற்ற பெறலாம்.? மாவட்ட செயலாளர்களிடம் பட்டியலை கேட்ட எடப்பாடி

By Ajmal Khan  |  First Published Jan 9, 2024, 1:42 PM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், யாரை வேட்பாளராக நிறுத்தினால் வெற்றி பெறலாம் என்கிற பட்டியலை வழங்கும் படி மாவட்ட செயலாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டும் அதிமுக

நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் பூத் கமிட்டி அமைப்பது, வாக்கு சாவடி முகவர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகளை தீவிரம் காட்டி வருகின்றனர். இந்தநிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக, திமுக, பாஜகவும் மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பாஜக கூட்டணியில் அதிமுக இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது கூட்டணியில் இருந்து விலகியுள்ளது. இதன் காரணமாக புதிய கூட்டணியை அமைக்க அதிமுக திட்டமிட்டு வருகிறது.

Tap to resize

Latest Videos

அதிமுகவின் வெற்றி வாய்ப்பு

தற்போது உள்ளி நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை தங்கள் அணிக்கு இழுக்கும் நடவடிக்கையில் தீவிரமாக உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம், அதிமுகவுடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகள், அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைக்க விரும்பும் கட்சிகள், அதற்கான வியூகங்களை அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், மக்களவைத் தேர்தலில் தங்கள் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்தலாம். எந்த அளவிற்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என தனித்தனியாக பட்டியலை வழங்கும் படிமாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பணிகளில் எந்த சுணக்கமும் இல்லாமல் தீவிரமாக பணியாற்ற வேண்டும் எனவும் கூட்டணி குறித்து நான் பார்த்துக்கொள்கிறேன் என பேசியுள்ளார்.

தனித்தனியாக ஆலோசனை

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை பொதுச்செயலாளர் முனுசாமி, இன்றைய கூட்டத்தில் தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. வேட்பாளர் பட்டியல் தயாரிப்பது உட்கட்சி விவகாரம், அது குறித்து இப்போது சொல்ல முடியாது. தேர்தலை எதிர்கொள்ள மிக வேகமாக ஆயுத்தமாகி வருகிறோம் என கூறினார். இதனிடையே தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை அதிமுக தீவிரம் காட்டியுள்ளது. இன்று மாலை முதல் சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில் மாவட்ட செயலாளர்களிடம் தனித்தனியாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதையும் படியுங்கள்

நீதிமன்றத்தையே தவறாக வழி நடத்திய பாஜக ஆட்சியாளர்கள்.. அரசியல் லாபகங்களுக்காக நீதி வளைக்கப்பட்டுள்ளது-ஸ்டாலின்

click me!