இது திராவிட மண்... மோடியின் தொடர் தமிழக வருகையால் பாஜகவுக்கு எந்த பலனும் கிடைக்காது- ஜெயக்குமார்

By Ajmal Khan  |  First Published Mar 4, 2024, 12:53 PM IST

அதிமுக -பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றி விட்ட பின் திமுக அதன் கூட்டணி கட்சிகளை கெஞ்சி கூத்தாடி தக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. இது எத்தனை நாளைக்கு நீடிக்கும் என தெரியவில்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
 


அதிமுக போராட்டம்

தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்பாட்டம் நடைப்பெற்றது. சென்னையில் வள்ளுவர் கூட்டத்தில் நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் ஹுசேன்,  நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்துக்கொண்டனர்.

Tap to resize

Latest Videos

போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், திமுக அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் , போதைப் பொருள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, ஊழில் இவற்றில் தான் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்தார். மாணவர்கள் சீரழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அரசின் கடமை,  ஆனால் ஆளும் கட்சியே போதைப் பொருள் விற்பனையை ஊக்கப்படுத்துவது வேதனை அளிப்பதாக கூறினார். 

ஜாபர் சாதிக்கிடம் பணம் பெற்றது யார்.?

ஜாபர் சாதிக் மீது தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காது,  காப்பாற்ற தான் முயற்சிக்கும் எனவும், மத்திய அரசு தான் இதில் தலையிட்டு ஜாபர் சாதிக்கிடம் யார் யார் பணம் பெற்றார்கள் என்பது குறித்த உண்மைகளை வெளி கொண்டு வந்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை வாங்கி தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அதிமுக ஆட்சியில் ஒன்றிரண்டு சம்பவம் நடந்திருந்தாலும்,  தவறு செய்தவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் நாள்தோறும் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக கூறினார். 

மோடி வருகை - எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது

பிரதமர் மோடியின் தமிழக  வருகை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், பிரதமர் மோடி வருகை ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது , அதனால் ஒரு பலனும் பாஜகவிற்கு கிடைக்காது.  ஏனென்றால் இது திராவிட மண் என தெரிவித்தார். திமுக கூட்டணி உடன்பாட்டில் இன்னும் இழுபறி நீடிக்கிறது. அங்கு உரிய சீட் கிடைக்காதவர்களுக்கு அதிமுக கூட்டணிக்கு வருவதற்கு ஒருவாய்ப்பு உள்ளதாக கூறிய அவர், அதிமுக - பா ஜ க வை கூட்டணியில் இருந்து கழற்றி விட்ட பின் திமுக அதன் கூட்டணி கட்சிகளை கெஞ்சி கூத்தாடி தக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. இது எத்தனை நாளைக்கு நீடிக்கும் என தெரியவில்லை என ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

அழிவுத் திட்டங்களை திணித்து இந்தியாவின் குப்பைத்தொட்டியாகவே தமிழ்நாட்டை பாஜக அரசு மாற்றுகிறது - சீறும் சீமான்

click me!